என் மகனுக்கு முதலில் அந்த தமிழ் திரைப்படத்தை தான் போட்டு காட்டுவேன் – காஜல் அகர்வால் பேச்சு

kajal-agarwal-
kajal-agarwal-

ஹிந்தி படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால்.. அதன் பிறகு தெலுங்கில் வெற்றி கண்டு பின் தமிழில் “பழனி” படத்தின் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் நடித்த நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி சிங்கம், ஜில்லா..

மெர்சல் என இவர் நடித்த ஒவ்வொரு படமும் பிளாக்பஸ்டர் வெற்றி அடைந்தது. இதனால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார். சினிமா உலகில் பறந்த கஜல் அகர்வால் திடீரென தனது நீண்ட நாள் நண்பரும், தொழிலதிபருமான கௌதம் கிச்சலு என்பவரை 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் இருவருக்கும் தற்போது ஒரு மகன் இருக்கிறார்  சினிமா, வாழ்க்கை என இரண்டிலும் ஜொலித்த காஜல் அகர்வால்.. தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் “இந்தியன் 2” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படி இருக்கின்ற நிலையில் காஜல் அகர்வால் பேசிய  சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது மகன் குறித்தும் பேசுகிறார்.

அதில் அவர் சொன்னது.. எனது மகனுக்கு 8 வயதாகும் வரை மொபைல், டிவி உள்பட்ட விஷயங்களை காட்டவே மாட்டேன் என கூறி இருக்கிறார். அவர் ஸ்கிரீன் டைம் என்ற விஷயத்தின் மீது அதிக அக்கறை காட்டுவதாகவும் கூறினார். மேலும் 8 வயதுக்கு பிறகு தான் படங்கள் பார்க்க அனுமதிப்பேன்.

என் மகனுக்கு துப்பாக்கி படத்தை தான் முதலில் போட்டு காட்டுவேன் என கூறினார்.  காஜல் அகர்வால் எத்தனை ஹிட் படங்களை கொடுத்திருந்தாலும் அவருடைய கேரியரில் மிகப்பெரிய ஒரு திருமூனை படமாக அமைந்தது துப்பாக்கி தான்.. இந்த படத்திற்கு பிறகு தான் அவருக்கு வாய்ப்புகள் ஏராளமாக குவிந்தாம் அந்த காரணத்தினால் என்னவோ இந்த படத்தை தான் முதலில் போட்டுக் காட்ட உள்ளாராம்.