இதுவரை யாரும் பார்த்திடாத ஒரு விஜய்யை எனது படத்தில் காட்டுவேன் – பிரபல இயக்குனர் பேட்டி.! யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போடும்..

vijay

தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுக்கும் இயக்குனர்கள் பலரும் முன்னணி இயக்குனர்களாக வலம் வருகின்றனர். அந்த லிஸ்ட்டில் இருப்பவர்கள் தான் இயக்குனர் பாண்டிராஜ். இவர் பசங்க படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை ஆரம்பித்தார். முதல் படமே இவருக்கு பிரமாண்டமான ஒரு வெற்றியை பெற்று கொடுத்தது.

அதனைத் தொடர்ந்து பாண்டிராஜ் வம்சம் படம் எடுத்தார். இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பற்றி சூப்பராக ஓடியது. மேலும் இவர் பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்தார். அதன் பிறகு மெரினா, இது நம்ம ஆளு, கடை குட்டி சிங்கம், நம்ம வீட்டுப் பிள்ளை, எதற்கு துணிந்தவன் போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து அசத்தி உள்ளார்.

இப்பொழுதும் பல கதைகளை வைத்திருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ். இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவரிடம் பல்வேறு விதமான கேள்விகள் கேட்கப்பட்டது அதில் ஒன்றாக தளபதி விஜய் பற்றி பேசியுள்ளார்.. நான் நடிகர் விஜயை இரண்டு தடவை சந்தித்து இருக்கிறேன் விஜய்க்காக ஒரு சூப்பரான கதையை உருவாக்கி வைத்திருக்கிறேன்.

நிச்சயம் அவரை வைத்து ஒரு நல்ல படத்தை இயக்குவேன் என கூறினார் மேலும் பேசிய அவர் என் மகனுடைய ஆசையும் நான் விஜய் வைத்து படம் பண்ண வேண்டும் என்பதுதான். நடிகர் விஜய்யை இதுவரை யாரும் பார்த்திராத ஒரு புதிய கேரக்டரில் அவரை நடிக்க வைப்பேன் என கூறினார்.

pandiraj
pandiraj

தளபதி விஜய் தற்பொழுது தனது 66 வது திரைப்படமான வாரிசு திரைப்படத்தில் நடித்த வருகிறார் அதனைத் தொடர்ந்து லோகேஷ் உடன் ஒரு படம் பண்ணுகிறார். இந்த படங்கள் முடிந்த பிறகு வேண்டுமானால் பாண்டிராஜ் விஜயுடன் இணைய அதிக வாய்ப்புகள் இருக்கும் என கூறப்படுகிறது.