உலக கோப்பையை வென்றால் ஓய்வு பெறுவேன்.! பிரபல விளையாட்டு வீரர் அதிரடி முடிவு…

sports
sports

கத்தார் உலக கோப்பை கால்பந்து போட்டி தான் தன்னுடைய கடைசி போட்டியாக இருக்கும் என போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் கேப்டன் கிறிஸ்டியானா ரொனால்டோ தெரிவித்துள்ளார். போர்ச்சுக்கல் கால்பந்து அணியின்  கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ இதுவரை 191 ஆட்டங்களில் விளையாடி 117 கோள்கள் எடுத்துள்ளார்.

சர்வதேச கால்பந்தில் அதிக கோல் அடித்தவர் இவர்தான் கத்தாரில் நாளை தொடங்கும் உலக கோப்பை கால்பந்து தொடருக்கு ஆயுத்தமாகி வரும் 37 வயதான ரொனால்டோ விற்கு இது ஐந்தாவது முறை உலக கோப்பை தொடராகும். அனேகமாக இதுதான் தனது இறுதியான உலகக் கோப்பை போட்டியாக இருக்கும் எனவும் அதிகபட்சமாக இன்னும் இரண்டு மூன்று தொடர்களில் விளையாடுவேன் என ரொனால்டோ தெரிவித்துள்ளார்.

தனது 40 வயதில் கால்பந்து விளையாட்டை நிறைவு செய்ய விரும்புவதாகவும் இது நல்ல வயது என கருதினாலும் எதிர்காலத்தில் தான் என்ன செய்வேன் என்பது தெரியாது என்று கூறினார். கத்தார் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில்  போர்ச்சுக்கல், அர்ஜென்டினா அணிகள் மோதுகின்றனர். 94 வது நிமிடத்தில்  நீங்கள் மீண்டும் அடிக்கும் கோலுடன்  கோப்பை போர்ச்சுக்கல் வசமானால் தங்களுடைய மனநிலை எப்படி இருக்கும் என ரொனால்டோவிடம்  கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த அவர் அவ்வாறு நடந்தால் களத்தில் மிகவும் மகிழ்ச்சிகரமான மனிதராக தான் இருப்பேன் எனவும்  அத்துடன் தனது கால்பந்து வாழ்க்கையை முடித்து ஓய்வு பெற்று விடுவேன் எனவும் கிறிஸ்டியானா ரொனால்டோ தெரிவித்துள்ளார்.