தளபதி விஜயின் அந்த கதாபாத்திரத்தை மறு உருவாக்கம் செய்வேன்..! இயக்குனர் லோகேஷ் அதிரடி பேட்டி..!

vijay-lokesh
vijay-lokesh

தமிழ் சினிமாவில் மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் இந்த திரைப்படத்தில் மாபெரும் வெற்றி கண்டது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்

அந்தவகையில் இந்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் நடிகர் கார்த்திக்கை வைத்து கைதி என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது மட்டுமில்லாமல் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய சாதனை படைத்தது.

அதன்பிறகு தளபதி விஜயை வைத்து மாஸ்டர் என்ற திரைப்படத்தை இயக்கி வெற்றி கண்ட லோகேஷ் சமீபத்தில் உலக நாயகன் கமலஹாசனை வைத்து விக்ரம் என்ற திரைப்படத்தை இயக்கி மாபெரும் வெற்றி கண்டுள்ளார் இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படம் சுமார் 400 கோடி வசூலை நெருங்கி உள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில் ரசிகர்கள் இதைக் கொண்டாடி வருகிறார்கள்.

மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக தளபதி 67வது திரைப்படத்தை இயக்க உள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் நேர்கானல் ஒன்றில் கலந்து கொண்ட லோகேஷ் கனகராஜ் அவர்கள் அடுத்தடுத்த படங்கள் பற்றிய பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

அந்த வகையில் சமீபத்தில் விக்ரம் திரைப்படத்தை மீண்டும் மறு உயிர் கொடுத்தது போல தளபதி விஜய் வைத்து அவருடைய பழைய திரைப்பட கதாபாத்திரங்கள் எவையேனும் நீங்கள் உயிர் கொடுப்பீர்களா என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு லோகேஷ் கனகராஜ் தளபதி விஜய் நடிப்பில் வெளியான கில்லி திரைப்படத்தில் இடம்பெற்ற சரவணன் வேலு கதாபாத்திரத்தை மறுஉருவாக்கம் செய்வேன் என்று கூறியுள்ளார்.

gilli-1
gilli-1

இதனைத் தொடர்ந்து கில்லி இரண்டாம் பாகம் வெளிவரும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் இருப்பது மட்டுமில்லாமல் லோகேஷ் கனகராஜ் அதற்கான முயற்சிகள் ஏதேனும் எடுப்பாரா என ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அப்படி ஒரு திரைப்படம் வெளிவந்தால் கண்டிப்பாக அந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெறும் என சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.