லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தென்னிந்திய திரை உலகில் நம்பர் ஒன் ஹீரோயின்னாக இருக்கிறார். இவர் சினிமா உலகில் டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாகவும் மற்றும் தன்னை நம்பி வருகின்ற சோலோ படங்களிலும் நடித்து வெற்றியை ருசிப்பதால் இவரது மார்க்கெட் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது.
அதற்கு ஏற்றார் போல கணிசமாக தனது சம்பளத்தையும் நயந்தாரா உயர்தி நடித்து வருகிறார். இப்பொழுது கூட லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா பல்வேறு படங்களில் நடிக்கிறார் அந்த படங்களுக்காகவும் சம்பளத்தை உயர்த்தி உள்ளார். நயன்தாரா அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
அதனை தொடர்ந்து லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கனெக்ட், கோல்ட் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அஜித்தின் 62 ஆவது திரைப்படத்திலும் இவர் தான் ஹீரோயின்னாக நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இது தவிர லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனது 75 வது திரைப்படத்தில் நடிப்பதற்கான வேலைகளையும் பார்த்து வருகிறார். நிகிலேஷ் கிருஷ்ணா சொன்ன கதை நயன்தாராவிற்கு ரொம்ப பிடித்து போகவே அவர் அந்த கதையில் நடிக்க உள்ளார் அது நயன்தாராவுக்கு 75 வது படம்.
இந்தப் படத்திற்காக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சுமார் 10 கோடி சம்பளம் கேட்டுள்ளார். பாலிவுட்டில் மட்டுமே ஆலியா பட், தீபிகா படுகோன் போன்றவர்கள் 10 கோடி சம்பளம் வாங்கினார்கள் அவர்களை தொடர்ந்து தென்னிந்திய சினிமா உலகில் இவ்வளவு சம்பளம் யாரும் வாங்கியதே கிடையாது முதல் முறையாக நயன்தாரா கேட்டுள்ளார்.
ஆனால் பட குழு அவருக்கு சில நிபந்தனைகளை வைத்துள்ளது அதாவது நயன்தாராவுக்கு 10 கோடி சம்பளம் தருவதில் பிரச்சனையில்லை. ஆனால் அவர் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை அப்படி இருக்கையில் ஏன் அவருக்கு நாங்கள் 10 கோடி தர வேண்டும் என தயாரிப்பாளர் கூறியுள்ளாராம். நயன்தாரா ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டால் அவருக்கு 10 கோடி தர வாய்ப்பு இருக்கிறது இல்லை என்றால் குறைக்கப்படும் என செய்திகள் வெளி வருகின்றன. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.