80, 90 காலகட்டங்களில் திரை உலகில் இருத்த நடிகர், நடிகைகள் பலரும் பன்முகத் தன்மை கொண்டவர்களாக இருந்தார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான் ஆர் சுந்தர்ராஜன். முதலில் உதவி இயக்குனராக பணியாற்றி பின் இயக்குனர் அவதாரம் எடுத்தார்.
சுகமான ராகங்கள், அம்மன் கோயில் கிழக்காலே, தழுவாத கைகள், என்கிட்ட மோதாதே, ராஜாதி ராஜா, மெல்ல திறந்த கதவு என பல வெற்றி படங்களை கொடுத்தார் அதோடு மட்டுமல்லாமல் நடிகராகவும் தற்போது வரை ஜொலித்து வருகிறார் ராஜா மகன், நம்ம அண்ணாச்சி, மக்களாட்சி, ஜானகிராமன் என பல படங்களில் இவர் நடித்திருக்கிறார்.
தற்பொழுது விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் அண்ணாமலை கதாபாத்திரத்தில் நடித்து அசத்து வருகிறார் இப்படி ஓடிக்கொண்டிருக்கும் ஆர் சுந்தர்ராஜன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய படங்கள் பற்றியும் நடிகர்கள் குறித்தும் பேசி உள்ளார் அவர் சொன்னது என்னவென்றால்..
என்னுடைய படங்கள் வெற்றி பெற காரணம்.. நான் படத்தின் கதைக்கு ஏற்றவாறு நடிகர்களை தேர்வு செய்வேன். உதாரணம் சொன்ன ஆர் சுந்தர்ராஜன்.. கே பாலச்சந்தர் சிவாஜியை வைத்து ஒரு படம் எடுத்தார் சிவாஜி எவ்வளவு பெரிய சிறந்த நடிகர் என எல்லோருக்கும் தெரியும் ஆனால் அந்த படம் வெளிவந்து தோல்வி அடைந்தது ஆனால் அதன் பிறகு நாகேஷ் வைத்து 10 படம் எடுத்தார்.
விஜயகாந்த் படத்துடன் மல்லுக்கட்டிய அர்ஜுன்.. வின்னர் யார் தெரியுமா.?
ஆனால் அந்த பத்து படம் வெற்றி பெற்றது காரணம் அந்த கதைக்கு நாகேஷ் சூட்டாக இருந்தார் என்பதுதான் உண்மை அதுபோலவே தான் கதைக்கான நடிகரை போட்டால் அந்த படம் ஹிட் அடிக்கும் எனக் கூறியுள்ளார். என் கதைக்கு ரஜினி தேவை என்றால் அவரை அணுகுவேன் அவர் கிடைக்கவில்லை என்றால் கிடைக்கின்ற நடிகரை ரஜினியாக மாற்ற முயற்சிப்பேன்.