கிரிக்கெட் உலகில் தனது திறமையை வெளிப்படுத்தி பல சாதனைகளுக்கு சொந்தக்காரராக விளங்குபவர் சச்சின் டெண்டுல்கர். சச்சின் அவர்கள் அண்மையில் தனது 47 வது பிறந்தநாளை கொண்டாடினார் இதை முன்னிட்டு கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் முன்னணி பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை கூறினார்கள் அதே வேலையில் சச்சின் ரசிகர்கள் பலர் சச்சினை பற்றிய செய்திகளை தினம்தோறும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு பகிர்ந்து வந்தனர்.
அண்மையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ஆஸ்திரேலியாவின் அதிவேக பந்து வீச்சாளர் பிரெட் லீ. கிரிக்கெட் விளையாட்டின் தலைசிறந்த வீரரான சச்சினை பற்றி கூறியுள்ளார் அதில் அவர் கூறியது நான் விளையாடிய காலத்தில் இளம் பந்துவீச்சாளர்கள் களத்தில் எப்படி செயல்பட வேண்டும் என்பதைப் பற்றி அறிவுரை வழங்கி வந்தவர் மெக்ராத்.
அதே காலகட்டத்தில் சச்சின் களத்தில் விளையாடிக் கொண்டிருந்தார் நான் பந்துவீச தயாரானபோது மெக்ராத் அருகில் வந்து சச்சினிடம் எப்பொழுதும் பேசாதே அவரை சீண்டாதே மீறினால் அவரை தூண்டி விடுவதற்கு சமம்.ஏன் பேசினோம் என்று ஒரு நாள் முழுவதும் வருத்தப்படும் அளவிற்கு அவருடைய ஆட்டம் அதிரடி வெளிப்படும் என அறிவுரை கூறுவார். அந்த அறிவுரை எனக்கு மட்டுமல்ல என்னை போன்ற சகல வீரருக்கும் இதைத்தான் மெக்ராத் கூறுவார் என கூறி நம்மை ஆச்சரியப்படுத்தினார்.
ஒரு சில பேட்ஸ்மேன்கள் வம்புக்கு இழுத்தால் கோபப்பட்டு தனது விக்கெட்டை இழப்பார்கள் என்பது வழக்கமான ஒன்று ஆனால் இத்தகைய செயல் சச்சினுடன் எடுப்படவில்லை என மேலும் தெரிவித்திருந்தார்.