கோடிக்கணக்கில் காசை கொட்டிக் கொடுத்தாலும் இந்த படத்தின் இரண்டாவது பாகத்தை மட்டும் எடுக்கவே மாட்டேன் – மாஸ் காட்டும் கே.எஸ். ரவிக்குமார்.

k.s. ravikumar

90 காலகட்டங்களில் பயணித்த பல சினிமா பிரபலங்கள் தற்போது சினிமா உலகில் பணியாற்றாமல் போயுள்ளனர் ஒரு சிலரோ சினிமாவை நன்கு புரிந்து கொண்டதால் முன்னேற முன்னேற தன்னையும் மாற்றிக் கொண்டு அதற்கு ஏற்றார் போல பயணிக்கின்றனர் அந்தவகையில் கேஎஸ் ரவிக்குமார் இயக்குனராகவும் நடிகராகவும் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.

கேஎஸ் ரவிக்குமார் இப்பொழுது பெரிதும் படங்களை இயக்கவில்லை என்றாலும் படங்களில் நடிப்பது தயாரிப்பதிலும் அதிகம் ஆர்வம் காட்டி அசத்தி வருகிறார். இவர் தயாரிப்பில் நடிப்பில் அண்மையில் வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் தான் கூகுள் குட்டப்பா. அதனைத் தொடர்ந்து கோப்ரா படத்திலும் நடித்துவருகிறார் இப்படி இருந்தாலும் இவர் இயக்கினால் அந்த படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட்டு தான் அடிக்கும்.

ஆனால் இவர் சமீபகாலமாக படங்களை இயக்காமல் இருந்து வருகிறார் இவர் இயக்கத்தில் ரஜினி கமல் விஜய் போன்றவர்கள் நடித்து மிகப்பெரிய அளவில் உயர்ந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது அதில் ஒரு படத்தைப் பற்றிதான் தற்போது பார்க்க இருக்கிறோம். கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு கமல் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் தசாவதாரம்.

இந்த படத்தில் நடிகர் கமல் மொத்தம் 10 வேடங்களில் நடித்து மிரட்டியிருப்பார் ஒவ்வொரு வேடமும் வியக்க வைக்கும் வகையில் இருந்தது சொல்லப்போனால் இந்த திரைப்படம் அப்போது வெளியாகி பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது. 60 கோடி பட்ஜெட்டில் உருவான தசாவதாரம் வெளியாகி சுமார் 220 கோடி வசூல் செய்து புதிய சாதனை படைத்தது.

thasaavtharam
thasaavtharam

இந்த படத்தை தொடர்ந்து இதன் இரண்டாவது பாகத்தை ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் எதிர்நோக்கி காத்துக் கொண்டுதான் இருக்கின்றனர் ஆனால் இதுகுறித்து இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் சொன்னது எனக்கும் சரி கமலுக்கும் சரி எத்தனை கோடிகள் கொட்டிக் கொடுத்தாலும் தசாவதாரம் போன்ற இன்னொரு படத்தை உருவாக்கவே முடியாது எனவே தசாவதாரம் 2 உருவாக வாய்ப்பே இல்லை என கூறினார்.