என்ன ஆனாலும் இதை மட்டும் நிறுத்த மாட்டேன்..! இந்த விஷயத்தில் கரார் காட்டும் ஐஸ்வர்யா..!

aishwariya-rajinikanth-1
aishwariya-rajinikanth-1

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாகவும் முக்கிய நடிகராகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் ரஜினிகாந்த் இவரை சூப்பர் ஸ்டார் என ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள் இவ்வாறு பிரபலமான நமது நடிகரின் மூத்த மகள் பெயர் தான் ஐஸ்வர்யா.

இவர் கடந்த 2004ஆம் ஆண்டு பிரபல முன்னணி நடிகர் தனுஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இந்நிலையில் இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன அதில் ஒருவன் பெயர் யாத்ரா மற்றொருவர் பெயர் லிங்கா என  வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 18 ஆண்டுகள் திருமணம் ஆன நிலையில் தற்போது இவர்கள் விவாகரத்தில் வந்து நிற்பதாக செய்திகள் வெளிவந்து சமூக வலைதளப் பக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவருமே தங்களுடைய பணியில் மிகவும் பிஸியாக இருந்து வருகிறார்கள்.

அந்த வகையில் ஐஸ்வர்யா 3 என்ற திரைப் படத்தின் மூலம்தான் முதன்முதலாக இயக்குனராக அறிமுகமானார் இதனை தொடர்ந்து டைரக்ஷனில் பயணி என்ற மியூசிக் வீடியோ 3 மொழிகளில் வெளியிட்டுள்ளார் அதேபோல தற்போது லாரன்சை வைத்து ஒரு புதிய திரைப்படம் ஒன்றையும் இயக்க உள்ளதாக தெரியவந்துள்ளது.

இதெல்லாம் இருக்க தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற காரணத்தினால் தினசரி உடற்பயிற்சி செய்வது நமது ஐஸ்வர்யாவுக்கு வழக்கமாகிப் போய்விட்டது அந்த வகையில் சமீபத்தில் வொர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் இந்த வீடியோவை வெளியிட்டது மட்டுமில்லாமல் அதனுடன் எந்த காரணத்துக்காகவும் நான் ஒர்க்கவுட் செய்வதை விடமாட்டேன் என்று கேப்ஷனில் பதிவிட்டுள்ளார். இவ்வாறு வெளிவந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் அனைவரும் அவரை பாராட்டி வருகிறார்கள்.