நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் தெலுங்கு மலையாளம் போன்ற அனைத்தும் மொழி திரைப்படங்களிலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தமிழில் கீர்த்தி சுரேஷ் இயக்குனர் செல்வராகவனுடன் இணைந்து நடித்து வந்த சானிக் காயிதம் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றது.
மேலும் தெலுங்கில் நடிகர் மகேஷ் பாபுவுடன் இணைந்து நடித்த சர்க்காரு வாரி பட்டா திரைப்படமும் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூலில் சிறந்து விளங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் தொடர்ந்து முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய பேச்சு நெட்டிசன்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்தப் பேட்டியில் கீர்த்தி சுரேஷ் என்ன சொல்லியுள்ளார் என்றால் எப்பொழுதுமே என்னுடைய நடிப்பு எனக்கு திருப்தி தராது அதனால் ஒவ்வொரு படத்திலும் இன்னும் நன்றாக நடிக்க வேண்டும் என்ற காரணத்தினாலேயே தனது முழு ஈடுபாட்டையும் கொடுப்பேன்.
அப்படி கொடுத்தாலுமே நன்றாக நடித்து இருக்கலாம் என்றுதான் எனக்கு தோன்றும் அதனாலேயே எனது திரைப்படங்களை நான் பார்க்க மாட்டேன். அப்படிப் பார்த்தால் நான் செய்திருக்கும் தவறு என் கண் முன் வந்து நிற்கும் இன்னும் சிறப்பாக நடித்திருக்கலாம் என்று மிகவும் வருத்த படுவேன் அதனாலேயே என் படங்களை பார்க்க மாட்டேன் எனவும் கூறியுள்ளார்.
மேலும் தன்னை நம்பி படம் எடுக்கும் இயக்குனர்களும் தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கும் எந்தவித நஷ்டமும் என்னால் ஏற்படக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருப்பேன். என அந்த பேட்டியில் பேசி உள்ளார். இதைக்கேட்ட நெட்டிசன்கள் பலரும் கீர்த்தி சுரேஷ் நடித்த படத்தை அவரை பார்க்க மாட்டாரம் அப்புறம் எதற்கு நம்ப பார்க்க வேண்டுமென பங்கம் செய்து வருகின்றனர்