நான் நடிக்காமல் கூட இருப்பேன் அதற்காக மொக்கையான திரைப்படத்தில் நடிக்க மாட்டேன்..! ஐஸ்வர்யா ராஜேஷின் பேச்சால் அதிர்ச்சியான ரசிகர்கள்..!

aishwariya-rajesh-2

சின்னத்திரையில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிகாட்டி தற்போது வெள்ளித்திரையில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பது மட்டுமில்லாமல் திறமையாகவும் இருப்பதன் காரணமாக தற்போது முன்னணி நடிகை அந்தஸ்தைப் பெற்று விட்டார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழில் முதன்முதலாக அட்டகத்தி என்ற திரைப் படத்தின் மூலம்தான் அறிமுகமானார். இத்திரை படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி மற்றும் தனுஷ் சிவகார்த்திகேயன் போன்ற பல்வேறு நடிகர்களின் திரைப்படத்தில் இவர் நடித்துள்ளார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் மொழியில் மட்டும் தன்னுடைய திறனை வெளிக்காட்டியது போதாது என்ற காரணத்தினால் தெலுங்கு மற்றும் மலையாள திரைப் படங்களிலும் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருவது மட்டுமல்லாமல் சற்று திரை உலகில் இவர் கொஞ்சம் திமிராக நடந்து கொள்வதாக  பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது.

இந்நிலையில் த்ரிஷாவின் முன்னாள் காதலன் ராணாவுடன் இணைந்து  நடிப்பதற்கான வாய்ப்பு ஐஸ்வர்யா ராஜேஷுக்கு  கிடைத்தன ஆனால் அவர் எனக்கு இதுபோன்ற கதை பிடிக்கவில்லை என்று கூறி அவருடன் நடிக்க மறுத்துவிட்டார். இவ்வாறு அவர் மறுத்தது மட்டுமில்லாமல் நான் நடிக்காமல் கூட இருப்பேன் ஆனால் இது போன்ற மொக்கை கதைகளில் நடிக்க மாட்டேன் என பேசி உள்ளாராம்.

aishwariya rajesh-1
aishwariya rajesh-1

இவ்வாறு பேசியது சமூக வலைதளப் பக்கத்தில் மிக வைரலாக பரவியது மட்டுமல்லாமல் இவர் இப்படி பேசுவதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் இவர் நடித்த திரைப்படங்களின் வெற்றி மற்றும் அவருக்கு கொடுத்த விருதுகள் தான் காரணம் என பலரும் கூறி வருகிறார்கள்.