நான் படம் இயக்க மாட்டேன் – இயக்கினால் இவரை வைத்துதான் முதலில் படம் எடுப்பேன் – நடிகர் விக்ரம் வெளிப்படை.

vikram
vikram

திரை உலகில் தனது திறமையை வெளிப்படுத்த ஒவ்வொரு நடிகர்களும் கடுமையாக உழைக்கின்றனர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான் ஆனால் ஒரு சிலரோ அதையும் தாண்டிய அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து காட்டுவார்கள் அதற்காக பல கஷ்டங்களை அனுபவித்து அதை ரியாலிட்டி கொடுக்க ரொம்பவும் மெனக்கெடுகிறார்கள்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் சிவாஜி, கமலுக்கு பிறகு நடிகர் விக்ரம் அதை செய்து காட்டி மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறார். இவர் நடித்த சேது, ஐ, அந்நியன் போன்ற பல்வேறு படங்களில் விக்ரமின் நடிப்பு மிரட்டும் வகையிலும் அதேசமயம் வியக்க வைக்கும் வகையிலும் இருந்தது.

சினிமாவில் நடிப்புக்கு பெயர்போன நடிகர் விக்ரம் கையில் இப்போ பல்வேறு திரைப்படங்களில் இருக்கின்றன அதிலும்  வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்து வருகிறார் . அந்த வகையில் பொன்னியின் செல்வன், கோப்ரா, மஹான் போன்ற படங்கள் இருக்கின்றன.

இந்த நிலையில் நடிகர் விக்ரம் நடிப்பையும் தாண்டி படங்களை இயக்கியனால் யாரை வைத்து முதலில் இயக்குவார் என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார் அதில் அவர் கூறியது  : இயக்குனர் பாலாவை வைத்து தான் படம் இயக்குவேன் என்று கூறினார். ஆங்கிலத்தில் the dirty dozen என்கின்ற படம் இருக்கிறது இந்த படத்தில் மொத்தம் 12 பேர் ஹீரோயிஸம் செய்வார்கள்.

அந்த மாதிரி கோலிவுட்டில் 12 ஹீரோக்களை நடிக்க வைத்து ஒரு படம் இயக்கினால் எப்படி இருக்கும் அது ஒரு ஆசை என கூறினார் விக்ரம். இதை அறிந்த ரசிகர்கள் விக்ரமுக்கு  இப்படி ஒரு ஆசை இருப்பது நிச்சயம் பெரிய விஷயம் அவர் படங்களை இயக்கினார் நிச்சயம் வெற்றிபெறுவார் என கூறி வாழ்த்தி வருகின்றனர்.