வலிமை படத்தில் நடித்து முடிக்கும் வரை வேறு எந்தப்படத்திலும் நடிக்க மாட்டேன்.! தயாரிப்பாளரிடம் கூறிய தல அஜித் .

ajith
ajith

சமீப காலமாக தல அஜித் அவர்கள் சமூக அக்கறை உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அத்தகைய படங்களின் மூலம் மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு விழிப்புணர்வை வெளிப்படுத்தியதன் மூலம் மக்கள் மற்றும் ரசிகர் மத்தியில் மேலும் பிரபலம் அடைந்துள்ளார்.இதனை தொடர்ந்து தற்போது அவர் வினோத் மற்றும் போனிகபூர் உடன் மீண்டும் இணைந்து வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இத்திரைப்படத்தின் சூட்டிங் இரண்டு கட்டங்கள் முடிவடைந்துள்ளன இதையடுத்து மூன்றாவது கட்ட படப்பிடிப்பை தொடங்கலாம் என படக்குழுவினர் கூறியுள்ளனர் இதற்கு தல அஜித் அவர்கள் தற்பொழுது கொரோனா உச்சம் பெற்றுள்ள நிலையில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது சரியாக இருக்காது படக்குழுவினர் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் கூறியுள்ளார்.

தற்பொழுது ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும் மக்கள்  நலன் கருதி சிறிதளவு ஊரடங்கு உத்தரவு தளர்வு செய்யப்பட்டு உள்ளது இந்த நிலையில் கடந்த மே 11ம் தேதி முதல் படத்தின் போஸ்ட் புரமோஷன் பணிகளை நிபந்தனையுடன் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது இதனை எடுத்து பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சில திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை சீரியல்கள் போன்றவை மீண்டும் ஆரம்பித்தன.

ஆனால் அஜித் அவர்களோ ஊழியர்களின் பாதுகாப்பை மனதில் வைத்துக் கொண்டு பணியை தொடங்க வேண்டாம் என தற்போது கூறியுள்ளார் இது சம்பந்தமாக இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களிடம் ஏற்கனவே அஜித் அவர்கள் பேசி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் மேலும் தமிழக அரசு பல நிபந்தனைகளுடன் படப்பிடிப்பை நடத்த அனுமதி  அளித்துள்ளது அந்த வகையில் தற்போது சின்னதிரை சீரியலைப் எடுக்க சுமார் 60 பேர் அனுமதி அளித்துள்ளது .

ajith
ajith

இதனையடுத்து தற்போது வெள்ளித்திரையில் பிரபலங்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் தங்களின் படங்களும் அனுமதி வழங்க வேண்டும் என கூறி வருகின்றனர்.இந்த நிலையில் தல அஜித் அவர்கள் தற்பொழுது அரசு அனுமதி கொடுத்தாலும் நாம் பொறுமையை கையாளுவது மிக சிறப்பாக இருக்கும் எனவும், வலிமை படத்தை முடிக்காமல் நான் வேறு எந்த படத்திலும் நடிக்க மாட்டேன் என உறுதியாக நின்று உள்ளார் அஜித் இதனையடுத்து தனது தயாரிப்பாளர் போனி கபூர் அவர்களிடம் உறுதியாக சொல்லியுள்ளார்.