நடிகர்களுக்காக ஒரு பொழுதும் கதை எழுத மாட்டேன் – “லவ் டுடே” பட ஹீரோ பேட்டி.!

pradeep-
pradeep-

அண்மைக்காலமாக தயாரிப்பாளர் இயக்குனர் இசையமைப்பாளர் போன்றவர்கள் திடீரென ஹீரோ அவதாரம் எடுத்து வெற்றியை ருசிக்க ஆரம்பிக்கின்றனர் அந்த வகையில் கோமாளி படத்தை இயக்கி பிரபலமடைந்தவர் பிரதீப் ரங்கநாதன். இவர் சமீபத்தில் இயக்கி நடித்த திரைப்படம் தான் லவ் டுடே இந்த படம் திரையரங்கில் வெளிவந்து..

மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று சூப்பராக ஓடி கொண்டிருக்கிறது வசூலிலும் இதுவரை மட்டுமே 20 கோடி கிட்டத்தட்ட வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது வருகின்ற நாட்களிலும் இந்த படத்தின் வசூல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் சமீபத்திய பேட்டி ஒன்றில் சில கேள்விகளுக்கு பதில் கொடுத்துள்ளார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..

1. உங்களுடைய அடுத்த படம் என்ன.? எதிர்காலம் குறித்து நிறைய கதைகள் ஓடிக் கொண்டிருக்கின்றன நானே குழப்பமாக இருக்கிறேன் நான்கு ஐந்து கதைகள் உள்ளன எதிர்காலத்தில் சமுதாயத்திற்கு என்ன தேவையோ அந்த கதையை கண்டிப்பாக எடுப்பேன் என்னைப் பொருத்தவரை நடிகருக்கு கதை எழுத மாட்டேன்.

எனது கதைக்கு எந்த நடிகர் சரியாக இருப்பாரோ அவரை வைத்து கண்டிப்பாக படம் இயக்குவேன் அது நடிகர் ரஜினிகாந்த் தனுஷ் பிரபுதேவா என யாராக இருந்தாலும் சரி என்றார். 2. உங்கள் படத்தில் அதிக கெட்ட வார்த்தைகள் பயன்படுத்தப்படுகிறது. கோமாளி படத்தில் சென்சார் ஆம்பூரில் 21 இடங்களில் கட் செய்யப்பட்டது ஆனால் இந்த படத்தில் ஏழு இடங்களில் மட்டுமே கட் செய்யப்பட்டது.

ட்ரெய்லரில் வரக்கூடிய கெட்ட வார்த்தைகள் வசனம் மட்டும் கொஞ்சம் அதிகம் மற்றபடி மற்ற வார்த்தைகள் அனைத்தும் பொதுவானது என்றார்.இப்படி பல்வேறு விதமான கேள்விகளுக்கு தனது ஸ்டைலில் தரமான பதிலடி கொடுத்து வருகின்றார் பிரதீப் ரங்கநாதன்..