நீங்க என்ன வேணா சொல்லுங்க.. இந்த டயலாக்கை மட்டும் பேசவே மாட்டேன் – இயக்குனரிடம் முரண்டு பிடித்த ரஜினி

Actor rajini
Actor rajini

Rajini : அண்ணாத்த படத்திற்கு பிறகு ரஜினி நடித்துள்ள “ஜெயிலர்” திரைப்படம் என்று திரையரங்குகளில் வெளியாகி அனைத்து இடங்களிலும் நல்ல விமர்சனத்தை பெற்று வெற்றி பெறமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ரஜினி பற்றிய ஒரு தகவல் வெளியாகி உள்ளது ரஜினி சினிமா உலகில் மிகப்பெரிய அளவில் உயர அவருடைய நடிப்பு ஒரு பக்கமும் பேசப்பட்டாலும்..

அவருடைய வசனங்களும் ரசிகர்களை கவர்ந்து இழுத்தது அந்த வகையில் பாட்ஷா படத்தில் நான் ஒரு தடவை சொன்னா 100 தடவை சொன்ன மாதிரி போன்ற டயலாக் பெரும் வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றது அதுபோல என் வழி தனி வழி என படையப்பா படத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகின.

இதுபோல அருணாச்சலம், முத்து என பல படங்களில் ரஜினி பஞ்ச் டயலாக் பேசி அசத்தி இருப்பார் இவரை தொடர்ந்து தான் பல நடிகர்கள் தனது படங்களில் பஞ்ச் டயலாக் பேசினர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி பஞ்ச டயலாக் பேசி வந்த ரஜினி ஒரே ஒரு டயலாக் மட்டும் பேசவே மாட்டேன் என பிடிவாதம் பிடித்துள்ளார்.

ரஜினி நடிப்பில் வெளியான கோச்சடையான் படத்தில் “சூரியன் கூட என்னை கேட்டால் தான் விழும் விழும்” என்று சொல்ல வேண்டுமாம் இந்த வசனத்தை கேட்டவுடன் இது வேறு ஒரு அரசியல் கட்சியின் சின்னத்தை குறிப்பிடுவது போல் உள்ளது நான் பேசவே மாட்டேன் என ரஜினி மறுத்து விட்டாராம். நடிகர் ரமேஷ் கண்ணா ரஜினிகாந்தை எவ்வளவு சமாதானப்படுத்தியும் அவர் பேச முடியாது என்று மறுத்துவிட்டாராம்..

கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் சமாதானத்திற்கு பிறகு ரஜினி ஒப்புக் கொள்ளாததால்.. அந்த வசனம் அந்த காட்சியில் இருந்து நீக்கப்பட்டது. கே எஸ் ரவிக்குமார் ஏற்கனவே முத்து படத்தில் கொடுத்த வசனங்களால் அரசியல் எதிர்ப்பு அதிகமானது இனி இது போன்ற வசனங்கள் வேண்டாம் என கண்டிஷன் போட்டாராம்..