சினிமாவில் அறிமுகமானபோது நான் செய்த தவறை மறுபடியும் செய்ய மாட்டேன்..! நடிகை பூர்ணா ஓப்பன் டாக்..!

poorna-1
poorna-1

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் பரத் நடிப்பில் வெளியான முனியாண்டி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பூர்ணா. இவ்வாறு பிரபலமான நமது நடிகை தான் நடித்த முதல் திரைப்படத்திலேயே தன்னை மிகவும் பிரபலப்படுத்தி கொண்டார்.

அந்த வகையில் இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து அவருக்கு தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது இவ்வாறு கிடைத்த வாய்ப்பை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்ட நமது நடிகை தமிழில் துரோகி ஆடுபுலி கொடிவீரன் போன்ற திரைப்படங்களில் நடித்து இருந்தார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமின்றி மலையாளம் தெலுங்கு என இரண்டு மொழிகளிலுமே பாரபட்சமின்றி பல்வேறு திரைப்படத்தில் நடித்ததுமட்டுமில்லாமல் தற்போது வரை மிகவும் பிஸியாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் நமது நடிகை சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய பொழுது தன்னுடைய திரை வாழ்க்கையின் அனுபவங்களை தொகுப்பாளர் இடம் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் அவர் கூறியது என்னவென்றால் நான் சினிமாத்துறைக்கு வந்த பொழுது தனியாக தான் வந்தேன்.

அந்த வகையில் பல்வேறு காலமாக சினிமாவில் சிறந்த விளங்கியது மட்டுமில்லாமல் நல்ல கதையை தேர்ந்தெடுக்காமல் கிடைத்த வாய்ப்பை  நடித்தது மிகவும் தவறு என்பதை நான் தற்போது உணர்ந்து கொண்டேன். ஆனால் இனிமேல் நான் நடிக்கும் திரைப்படத்தில் நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்த பின்னர் தான்  நடிக்க உள்ளேன் என்று கூறியுள்ளார்.

இவ்வாறு நடிகை பூர்ணா பேட்டியில் பேசியது தற்போது சமூகவலைத்தள பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.