தமிழ் சினிமாவில் இன்று உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் தனுஷ். தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். அந்த வகையில் திருச்சிற்றம்பலம், வாத்தி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்த வாத்தி திரைப்படம்.
பிப்ரவரி மாதம் கடந்த 17ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது இந்தப் படத்தில் தனுஷ் உடன் இணைந்து சம்யுக்தா மேனன், சமுத்திரக்கனி, கென் கருணாஸ், சாய் குமார், kanihella bharani மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்து அசத்தினர்.
மேலும் வாத்தி திரைப்படம் முழுக்க முழுக்க கல்வி சம்பந்தப்பட்ட ஒரு படமாக இருந்ததால் மக்கள் மத்தியில் அமோக வரவேற்ப்பை பெற்று வசூலில் 100 கோடிக்கு மேல் அள்ளி வெற்றி நடை கொண்டு வருகிறது. இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கேப்டன் மில்லர் திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.
இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் தனுஷ் சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னை நம்பி ஏமாற்றிய பிரபலங்கள் குறித்து வெளிப்படையாக பேசி உள்ளார் அதில் அவர் சொன்னது.. தன் வாழ்க்கையில் பலரை நம்பி நான் மோசம் போயிட்டேன் என்றும், நான் நம்பியவர்கள் மொத்தம் நான்கு பேர் இருந்ததாகவும் அதில் மூன்று பேர் தன்னை ஏமாற்றி விட்டார்கள் என்றும் தன்னை ஏமாற்ற ஒரே ஆள்..
யார் என்றால் அது வெற்றிமாறன் தான் எனவும் கூறினார் தொடர்ந்து பேசிய அவர் சிலர் பெரிய வெற்றிகளை கண்டவுடன் தன்னை தவிர்த்து விட்டதாகவும், பெரிய வெற்றிகளை பார்த்த பிறகும் தன் கூடவே இருப்பவர்கள் இயக்குனர் வெற்றிமாறன் மட்டும் தான் என்று நடிகர் தனுஷ் வெளிப்படையாக கூறியிருந்தார் இந்த தகவல் தற்பொழுது சோசியல் மீடியா பக்கத்தில் காட்டு தீ போல பரவி வருகிறது.