தமிழ் சினிமாவுக்கு குறைந்த திரைப்படங்களை இயக்கி இருந்தாலும் அந்த திரைப்படங்கள் ஒவ்வொரு அதிரிபுதிரி ஹிட் அடித்ததால் முன்னணி இயக்குனர் என்ற அந்தஸ்தை பெற்றவர் கார்த்திக் சுப்புராஜ். இவர் இயக்கத்தில் வெளியான பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி, பேட்ட போன்ற ஒவ்வொரு திரைப்படங்களும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் ஹிட்டடித்தன.
பல்வேறு ஹிட் படங்களை கார்த்திக் சுப்புராஜ் அவரது கேரியரில் கொடுத்து இருந்தாலும் மறக்க முடியாத படமாக அமைந்தது பேட்ட. சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளிவந்த இந்த படம் எதிர்பார்க்காத வசூல் வேட்டை நடத்தியதோடு ரஜினி கேரியரில் ஒரு பெஸ்டான படமாக அமைந்தது.
இந்த படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் தனுஷுடன் இணைந்து ஜகமே தந்திரம் என்ற திரைப்படத்தை எடுத்து முடித்துள்ளார் இந்த படம் வருகின்ற 18ம் தேதி நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் சில முக்கிய மீடியாக்களுக்கு கார்த்திக் சுப்புராஜ் பேட்டி கொடுத்து வருகிறார் அந்த வகையில் இவரிடம் பேட்ட படத்தில் உங்களால் மறக்க முடியாத காட்சி எது என்று கேட்டனர் அதற்கு பதில் கூறியது.
கடைசியில் ராமன் ஆண்டாலும் பாடல் தான் முதலில் நாங்கள் அந்த காட்சியை வேறு ஒரு இசையை யோசித்து வைத்திருந்தோம் நாயகன் அவ்வளவு வருடங்கள் மனதில் இருந்த பகையை தீர்த்து வீட்டு வில்லனை கொன்று விட்டு வந்த பிறகு உற்சாகமாக நடனம் ஆட வேண்டும் ராமன் ஆண்டாலும் பாடலை அங்கு பயன்படுத்தலாம் என்ற எண்ணமே எங்களுக்கு கிடையாது.
ருத்ரதாண்டவம் போல மனதில் வைத்திருந்தோம் நானும், அனிருத்தும் பேசி ஒரு இசையை தயார் செய்து ரஜினிக்கும் போட்டுக் காட்டினோம் யோசித்துவிட்டு நன்றாக இருக்கிறது ஆனால் இறுதி காட்சியில் படம் முடித்துவிட்டு ரசிகர்கள் உற்சாகமாக செல்ல வேண்டும் என்பதற்காக வேறு ஒன்றைப் பயன்படுத்தலாம் என யோசிக்க உடனடியாக ராமன் ஆண்டாலும் என்ற பாடலை ரீமிக்ஸ் செய்து பார்த்தோம் சூப்பராக இருந்தது .
அதையே நாங்கள் கடைசியில் வைத்து விட்டோம் என்று சொன்னார் இதுவே அப்பொழுது எனது மனதில் மிக ஆழமாக பதிந்த காட்சி பேட்ட படத்தில் இது என்னால் மறக்கவும் முடியாது என கூறினார்.