சினிமா உலகில் எவ்வளவு உச்சத்தை எட்டினாலும் சரி இதை மட்டும் பண்ணவே மாட்டேன் – பெருமையாக கூறும் சிவகார்த்திகேயன்.?

sivakarthikeyan
sivakarthikeyan

சின்னத்திரையில் காமெடியனாகவும், தொகுப்பாளராகவும் வலம் வந்த சிவகார்த்திகேயன் ஒரு கட்டத்தில் வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்தார். சினிமாவுலகில் ஆக்சன் திரைப்படங்களை விட காமெடி கலந்த திரைப்படங்கள் எப்பொழுதும் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்பதை நன்கு உணர்ந்து கொண்டு இருந்த சிவர்கதிகேயன் நடித்து அசத்தி வருகிறார்.

அந்த படங்களில் ஆக்ஷன், காதல் ஆகியவை இருந்தாலும் அதை விட அதிகமாக காமெடி இருப்பதால் அவரது திரைப்படங்கள் அனைத்தும் அதிரிபுதிரி ஹிட் அடிக்கின்றன. அதன் விளைவாகவே குறைந்த காலத்திலேயே முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தையும் பெற்றுள்ளார் மேலும் இவரது திரைப்படங்கள் பிரம்மாண்ட வசூலை அள்ளுகின்றன.

அப்படி அண்மையில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படம் 100 கோடி வசூல் செய்து புதிய சாதனை படைத்தது அதனை தொடர்ந்து பல்வேறு புதிய படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். அந்த வகையில் சிவகார்த்திகேயன் கையில் டான், அயாலன், சிங்கபாதை மற்றும் தெலுங்கில் ஒரு படம் பண்ணுகிறார்.இப்படி தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் சிவகார்த்திகேயனுக்கு நாளுக்கு நாள் ரசிகர்களும் அதிகரித்துக் கொண்டே வருகின்றனர்.

சிவகார்த்திகேயன் தெலுங்கில் அனுதிப் இயக்கத்தில் ஒரு படம் பண்ணுகிறார் இந்த படத்திற்கான படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை மரியா நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த படம் வெற்றி பெறும் பட்சத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டிலும் இவரது மார்க்கெட் உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு புதிய விஷயத்தை சொல்லி உள்ளார் சமீப காலமாக பிற மொழியில் ஹிட் அடித்த பல  திரைப்படங்கள் ரீமேக் செய்யப்படுகிறது. அதில் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடிப்பு அசத்துகின்றனர் ஆனால் நான் ரீமேக் படத்தில்  இதுவரை நடித்ததே கிடையாது என பெருமையுடன் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். பல்வேறு ரீமேக் திரைப்படங்களில் நடிக்க தனக்கு வாய்ப்பு கிடைத்தாலும் அதனை எல்லாம் நிராகரித்து விட்டாராம். இதை அவரே பேட்டி ஒன்றில் சொல்லி உள்ளார்.