தளபதி விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி உடன் முதல் முறையாக கைகோர்த்து வாரிசு படத்தில் நடித்துள்ளார். அதுவும் இந்த படத்தில் தளபதி விஜய் மிகப்பெரிய ஒரு பணக்காரராக நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் அவருடன் கைகோர்த்து ராஷ்மிகா மந்தனா, ஷாம், ஸ்ரீகாந்த், ஜெயசுதா..
மற்றும் பிரபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ், யோகி பாபு போன்ற பல முன்னணி நடிகர், நடிகைகள் சிறப்பான வேடத்தில் நடித்துள்ளனர். வாரிசு படம் அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு ரிலீஸ் ஆக இருக்கிறது அதற்கு முன்பாக ப்ரோமோஷன் வேலைகளில் தீவிரம் காட்டி வருகிறது படக்குழு..
வாரிசு நடித்த பிரபலங்கள் பேட்டி கொடுத்து வருகின்றனர் அப்படி சமீபத்திய பேட்டி ஒன்றில் வாரிசு படத்தில் விஜய்க்கு சகோதரராக நடித்துள்ள ஷாம் சில தகவல்களை பகிர்ந்து கொண்டார்.. அதில் வாரிசு மற்றும் விஜய் படம் குறித்து பல தகவல்களை பகிர்ந்து கொண்டார். அப்பொழுது ஒரு சிறப்பான சம்பவத்தையும் சொன்னார்..
வாரிசு படத்தின் ஷூட்டிங்கில் நடிகர் ஷாமை பார்த்த விஜய் முதல் படத்திலேயே இரண்டு குதிரைகள் ஓட்டிட்டு வந்திருக்க யாருடா நீ என கேட்டாராம்.. ஷாம் 12 B படத்தில் மூலம் தான் ஹீரோவாக அறிமுகமானார் அந்த படத்தில் ஜோதிகா, சிம்ரன் என இரண்டு முன்னணி நடிகைகளுடன் நடித்திருந்தனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை ஜோதிகா 2018 ஆண்டே காற்றின் மொழி படத்தின் ப்ரோமோஷனில் கலந்து கொண்ட போது சில தகவல்களை சொல்லி உள்ளார் அதில் அவர் சொன்னது அஜித், சூர்யா மற்றும் மாதவனுடன் நடிப்பது கம்ப்யூட்டர்ஃபுலாக இருக்கும்.. சில நடிகர்களுடன் தொடர்ந்து நடிப்பது எளிதாக இருக்காது என கூறியுள்ளார் இவர் மறைமுகமாக விஜயை தாக்கி பேசி இருக்கிறார் என பலரும் கூறி வருகின்றனர்.