ஒரு படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமடைந்தவர் சாய் பல்லவி மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி நடிப்பில் உருவான திரைப்படம் பிரேமம் இந்த படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தவர் சாய் பல்லவி. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவருக்கு தென்னிந்திய சினிமா உலகம் முழுவதும் ஏகப்பட்ட பட வாய்ப்புகள் கிடைத்தது.
அதிலும் குறிப்பாக தமிழில் சூர்யாவுடன் என்ஜிகே, தனுஷ் உடன் மாரி போன்ற படங்களில் நடித்தார் ஆனால் இந்த இரண்டு படங்களும் சொல்லிக் கொள்ளும்படி மிகப் பிரமாண்ட வெற்றியை ருசிக்கவில்லை இதனை தொடர்ந்து தமிழ் பக்கமும் அவர் பெருமளவு நடிக்கவில்லை ஆனால் தெலுங்கில் ஏகப்பட்ட வாய்ப்புகள் குவிந்த வண்ணமே வருகின்றன.
அதில் சாய்பல்லவி தேர்ந்தெடுத்து நடிக்கும் திரைப்படங்கள் அனைத்தும் வெற்றிப் படங்கள் தான் ஆனால் தொடர்ந்து தெலுங்கில் ஏராளமான வாய்ப்புகள் இன்னும் குவிந்து கொண்டே இருக்கின்றன இப்படி ஓடிக் கொண்டிருக்கும் சாய்பல்லவி அண்மை காலமாக தொடர்ந்து புகைப்படம் மற்றும் வீடியோக்களையும் வெளியிட்டு வருவதால் இவருக்கு என ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகியுள்ளன.
இப்படி இருக்கின்ற நிலையில் சாய் பல்லவி தெலுங்கு பிரபல நடிகர் ஒருவருடன் மட்டும் எந்த ஒரு சூழ்நிலையிலும் நடிக்கவே மாட்டேன் என ஓப்பனாக சொல்லி உள்ளார் இது தெலுங்கு சினிமா ரசிகர்களை சற்று அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சாய்பல்லவி சொன்ன நடிகர்கள் வேறு யாரும் அல்ல..
தெலுங்கு சினிமாவில் தொடர் வெற்றி படங்களை கொடுத்து வரும் நடிகர் விஜய் தேவர் கொண்டாவை தான் அவர் குறிப்பிட்டு சொல்லி உள்ளார் விஜய் தேவர் கொண்டா உடன் மட்டும் படங்களில் நடிக்கவே மாட்டேன் என அதிரடியாக அவர் சொல்லி உள்ளார் ஆனால் என்ன காரணம் என தெரியவில்லை. இச்செய்தி தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரல் ஆகி வருகிறது.