சினிமா உலகில் பிரபலமடைந்த பலரும் விளம்பர படங்களில் நடிப்பது வழக்கம் அந்த வகையில் அஜித், விஜய் தொடங்கி பலர் நடித்துள்ளனர் அந்த லிஸ்ட்டில் இணைந்துள்ளவர் தான் நடிகர் சரத்குமார் இவர் தமிழ் சினிமாவில் நல்ல நல்ல சமூக அக்கறை உள்ள படங்களில் நடித்து பிரபலம் அடைந்த இவர் அதேசமயம் விளம்பர படங்களிலும் நடித்து அசத்து உள்ளார்.
அப்படி வேஷ்டி, இரும்பு கம்பி என தொடங்கி பல விளம்பரங்களில் இவர் நடித்துள்ளார் அப்படித் தான் அண்மையில் ஆன்லைனில் ரம்மி விளையாட்டு விளம்பரத்தில் நடித்து இருந்தார். பலர் இந்த விளையாட்டை தடை செய்ய வேண்டும் என கூறி வருகின்ற நிலையில் சரத்குமார் இந்த விளம்பர படங்களில் நடித்து மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.
பலரும் சோசியல் மீடியாவில் சரத்குமாரை விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் வீரர்களில் ஒருவர் நடிகர் சென்ராயன் இவர் பேசி உள்ளது என்னவென்றால்.. நான் ரம்மி, மங்காத்தா போன்ற படங்களை தான் பார்த்திருப்பதாகவும் ஆனால் சீட்டுக்கட்டு அறவே பிடிக்காது என்றும்,
இது போன்ற விளையாட்டில் தன்னை நடிக்க அழைத்தால் போக மாட்டேன் எனவும். எவ்வளவு பணம் கொடுத்தாலும் சரி போக மாட்டேன் எனவும் மேலும் அந்த ரம்மி விளம்பரத்தை தான் பார்த்தது கூட கிடையாது எனக் கூறி இருக்கிறார். வளர்ந்து வரும் நடிகர் சென்ராயன் கூட இது போன்ற ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என கூறுகிறார்.
ஆனால் சரத்குமார் ஒரு அனுபவசாலி முன்னணி நடிகராக விளங்கும் இவர் இதுபோன்ற விளையாட்டு விளம்பரங்களில் நடிப்பது ரொம்ப தப்பு என கூறி பலரும் விமர்சித்து வருகின்றனர் இந்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் காட்டு தீ போல பரவி வருகிறது.