இனி அந்த மாதிரியான படங்களில் நடிக்கவே மாட்டேன் – ரசிகர்களுக்காக முடிவை மாற்றிய ரஜினி.!

rajini
rajini

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திர நடிகர்களாக விளங்குபவர் கமல் மற்றும் ரஜினிகாந்த் இவர்கள் இருவரும் இப்பொழுது வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து அசதி வருகின்றனர் அந்த வகையில் கமலஹாசன் இத்தனை வருடம் கிடப்பில்  கிடந்த இந்தியன் 2 படத்தை மீண்டும் தூசி தட்டி அதில்  நடிக்கிறார்.

நடிகர் ரஜினி தனது 169 வது திரைப்படமான ஜெயிலர் படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் சென்னையில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. இவர்கள் இருவரும் இப்பொழுது பெரும் அளவு ஆக்சன் நிறைந்த படங்களிலேயே நடிக்கின்றனர் .

இவர்களது  படங்களில் காமெடி இருந்தாலும் ரஜினி, கமல் காமெடியாக நடிப்பதில்லை ஆனால் ஆரம்ப கால கட்டத்தில் அப்படி கிடையாது ரஜினி, கமல் காமெடியாக நடிப்பார்கள். குறிப்பாக 80 90 கால கட்டங்களில் இவர்களது பல இடங்களில் முழு நீள காமெடி படங்களை நிறைய இருந்து வந்துள்ளன அதாவது கிரேசி மோகன் வசனத்தில் கமல் நடித்த காமெடி படங்கள் பல..

பஞ்சதந்திரம் தெனாலி, வசூல்ராஜா எம்பிபிஎஸ் போன்ற படங்களில் முழு நீள காமெடிகள் இருக்கும், கருத்துள்ளதாகவும் இருந்தது அதேபோல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தில்லுமுல்லு, வீரா போன்ற காமெடி படங்களிலும் நடித்தார். ஆனால் தற்பொழுது ரஜினி, கமல் காமெடி ஜானலில் படமே எடுப்பதில்லை..

அதுபோன்று எடுத்தால் இப்போ இருக்கும் இளம் ரசிகர்களை கவருமா என்ற சந்தேகமும் ரஜினி கமலுக்கு இருந்து வந்துள்ளது. அதை மனதில் வைத்துக்கொண்டு என்னவோ இவர்கள் இந்த மாதிரியான படங்களை தவிர்த்து வருகின்றனர் இனிய அதுபோன்ற படங்களில் நடிக்க வாய்ப்பே இல்லை என ரஜினி ஒரு மேடையில் பேசி இருந்தார்..

இப்பொழுதும் இருக்கும் ரசிகர்களுக்கு வேண்டுமானால் ரஜினி கமல் காமெடி செய்தால் பிடிக்காது ஆனால் 90 கால கட்டங்களில் இருந்த ரசிகர்களுக்கு ரஜினி கமல் காமெடி செய்தால் ரொம்பவும் பிடிக்கும் என்பது தான் உண்மை.. ரஜினி கமலை அப்படியே பார்க்க முடியாதது 90 கிட்ஸ் ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.