சைக்கோ படத்தில் நான் நடிக்கவே கிடையாது.. ஒரே போடாக போட்ட உதயநிதி ஸ்டாலின்..

udhayanithi
udhayanithi

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் உதயநிதி ஸ்டாலின் திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார் இப்படிப்பட்ட நிலையில் இவருடைய நடிப்பில் விரைவில் சில திரைப்படங்கள் வெளியாக இருக்கும் நிலையில் அது குறித்து பிரமோஷன் பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் சமீப பேட்டி ஒன்றில் சைக்கோ திரைப்படம் பற்றி இவர் பேசி உள்ள நிலையில் அது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கடந்த 2020ஆம் ஆண்டு வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்ற திரைப்படம் தான் சைக்கோ. இந்த படத்தினை மிக்சிங் இயக்க டபுள் மீனிங் ப்ரோமோஷன் சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரித்திருந்தார்.

சைக்கோ திரில்லர் படமாக உருவான இந்த படத்தில் ஹீரோவாக உதயநிதி ஸ்டாலின் இவருக்கு ஜோடியாக அதிதி ராவ் மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் நித்தியாமேனன் ஆகியோர்கள் நடித்திருந்தனர். இவர்களைத் தொடர்ந்து ரேணுகா, சிங்கம் புலி, ராம், ஆடுகளம் நரேன், ஷாஜி சென் ஆகியோர்கள் துணை வருடங்களில் நடித்திருந்தனர்.

மேலும் தன்வீர் மிர் ஒளிப்பதிவு செய்ய என் அருண்குமார் இந்த படத்தினை தொகுத்திருந்தார் இதனைத் தொடர்ந்து இசையமைப்பாளர் இளையராஜா இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். இரண்டு வருடங்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் தற்பொழுது இது பற்றிய உண்மையான தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது சமீப பேட்டி ஒன்றில் உதயநிதியின் ஸ்டாலின் அவர்கள் நான் சைக்கோ திரைப்படத்தில் நான் நடிக்கவே இல்லை வெறும் ஐந்து நாட்கள் மட்டுமே படப்பிடிப்பிற்கு சென்றேன் அந்த நேரத்தில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றதால் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தேன் இந்நிலையில் என்னைப் போன்று இருக்கும் ஒரு பையனை படப்பிடிப்பிற்கு அனுப்பி வைத்தேன்.

இந்த நேரத்தில் இயக்குனர் கிளைமாக்ஸ்சில் நீங்கள் தான் நடிக்க வேண்டும் என சொன்னார் ஆனால் அதெல்லாம் முடியாது ஹீரோயின வச்சி பாத்துக்கங்க என கூறிவிட்டேன் இதன் காரணத்தினால் தான் திடீரென கிளைமாக்ஸ் காட்சியில் நான் காணாமல் போய் இருப்பேன் இவ்வாறு சைக்கோ திரைப்படத்தில் எல்லாமே டூப்பு தான் என கூறி சிரித்துள்ளார்.