இந்த படம் ஓடலனா நான் இனி சினிமாவில் நடிக்கவே மாட்டேன்..? கோபப்பட்ட திரிஷா

trisha
trisha

சினிமா உலகில் 22 வருடங்களுக்கு மேலாக நடித்து ஓடிக்கொண்டிருப்பவர் நடிகை திரிஷா இவர் ஆரம்பத்தில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் பிறகு இவருடைய நடிப்பு சிறப்பாக இருந்த காரணத்தினால் ஹீரோயின் வாய்ப்பு தேடி வந்தது அதை ஒவ்வொன்றையும் சரியாக பயன்படுத்திக் வளர்ந்து வந்தார்.

ஆனால் ஒரு கட்டத்தில் இவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து தோல்வி படங்களாக மாறியதால் ராசி இல்லாத நடிகை என முத்திரை  குத்தப்பட்டது பலரும் இவரை விமர்சிக்கவும் தொடங்கினர் இந்த நிலையில் தான் ஹரி இயக்கத்தில் உருவான சாமி படத்தில் இணைந்தார் இந்த படத்தில் ஏன் திரிஷாவை நடிக்க வைக்கிறார்கள் என பலரும்..

இயக்குனர் ஹரியிடமே நேரடியாக கேட்டனர் அவரும் சரியான காரணத்தை சொல்லி சாமி படத்தில் திரிஷாவை நடிக்க வைத்தார் அந்த படம் வெளி ஆவதற்கு முன்பாக திரிஷாவிடம் நீங்கள் அடுத்தடுத்த தோல்வி படங்களை கொடுத்து வருகிறீர்கள். இந்த படம் தோல்வி படமானால் என்ன செய்வீர்கள் என கேட்டதற்கு..

இந்த படம் வெற்றி பெறவில்லை என்றால் நான் சினிமாவை விட்டு விலகி விடுகிறேன் என கூறினாராம் ஆனால் அவர் நினைத்தது போலவே படம் வெளிவந்து அதிரி புதிரி ஹிட் அடித்தது இந்த படத்திற்கு பிறகு டாப் நடிகர்களின் படங்களை அள்ளினார் குறிப்பாக அஜித் விஜய் போன்ற நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார்.

இப்படி ஓடிக்கொண்டிருந்த இவருக்கு வயது முதிர்வின் காரணமாக வாய்ப்புகள் குறைந்தன ஆனால் 96 திரைப்படம் மீண்டும் அவருக்கு ஒரு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இப்பொழுது நல்ல கதை அம்சமுள்ள படங்களில் நடித்து ஓடுவதாக பயில்வான் ரங்கநாதன் திரிஷாவை பற்றி புகழ்ந்து பேசினார்.