இனி கனவில் கூட காமெடி நடிகராக நடிக்க மாட்டேன்..! நடிகர் சந்தானம் ஓபன் டாக்..!

santhanam

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களாக வலம் வருபவர் தான் கவுண்டமணி செந்தில் இவர்கள் இருவருமே தமிழ் சினிமாவில் மிகப் பெரிய காமெடி நடிகர்களாக வலம் வந்துள்ளார்கள் தற்போது இவர்களின் இடத்தை நிவர்த்தி செய்த ஒரு காமெடி நடிகர் என்றால் அது சந்தானம் தான்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சந்தானம் வின் டிவியில் ஒளிபரப்பான டீ கடை பெஞ்சு என்ற நிகழ்ச்சி மூலமாக திரையில் முகம் காட்ட ஆரம்பித்தார் அதன் பிறகு லொள்ளு சபா நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலமாக மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து விட்டார்.

நடிகர் சந்தானம் பேசாத கண்ணும் பேசுமே என்ற திரைப் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது பின்னர் அவர் சிம்பு நடிப்பில் வெளியான காதல் அழிவதில்லை என்ற திரைப்படத்திலும் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக் காட்டி இருந்தார்.

அதன் பிறகு சந்தானம் தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தது மட்டுமில்லாமல் பல முன்னணி நடிகர்களின் திரை படத்தில் இவர்தான் முதல் சாய்ஸாக திகழ்ந்து வந்தார். இது ஒரு பக்கமிருக்க சமீபத்தில் நடிகர் சந்தானம் ஹீரோவாக பல திரைப்படங்களில் நடித்து கெத்து காட்டுகிறார்.

santhanam-1
santhanam-1

அந்த வகையில் இவர் டிக்கிலோனா ஹரிஸ் ஜெயராஜ் தில்லுக்குதுட்டு போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்தது மட்டுமில்லாமல் சமீபத்தில் ஏஜென்ட் கண்ணாயிரம் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் மட்டுமில்லாமல் தற்போது சந்தானம் பிரசாந்த் ராஜேஷ் இயக்கத்தில் மற்றொரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

santhanam-2

சமீபத்தில் நடிகர் சந்தானம் விவேக் மற்றும் வடிவேலு குறித்து பேட்டியில் பேசியுள்ளார் அப்போது விவேக் சக்க போடு போடு ராஜா என்ற திரைப்படத்தில் நடித்து இருக்கிறார் அவருடைய இழப்பு தமிழ் திரை உலகிற்கு ஒரு மிகப்பெரிய இழப்பு அதுமட்டுமில்லாமல் அவருடைய பாணியில் காமெடி பண்ண இன்னுமொருவர் பிறக்கவில்லை என்று சந்தானம் கூறியிருந்தார்.

santhanam-3

மேலும் விவேக் சார் ஒரு ட்ராக் என்றால் வடிவேலு சாரும் ஒரு ட்ராக். தற்சமயம் மீம்ஸ் கிரியேட்டர்ஸ்களுக்கு முக்கிய பங்கு வகிப்பது வடிவேலு மற்றும் விவேக் காமெடிகள் தான். அவர்களுடைய படங்களை பார்க்க வேண்டும் என்று எனக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது ஆனால் நான் தற்போது ஹீரோவாகி விட்டேன் ஆகையால் என்னால் தன்னுடைய கதாபாத்திரத்தை தாண்டி காமெடிக்கு போக முடியவில்லை. என சந்தனம் பேட்டியில் கூறியுள்ளார்.