விஜயை வைத்து மீண்டும் படம் பண்ணுவேன் – பிரபல இயக்குனர் பேட்டி.! ரசிகர்களின் மனநிலை என்ன தெரியுமா.?

vijay
vijay

தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக வலம் வருபவர் தளபதி விஜய் இவர் முன்னணி இயக்குனர் இளம் இயக்குனர் என்று பார்க்காமல் கதை சிறப்பாக இருந்தால் எந்த இயக்குனர்களுடன் வேண்டுமானாலும் கைகோர்ப்பார் அதுதான் விஜயின் ஸ்டைலும் கூட.. இவர் தற்பொழுது தனது 66-வது திரைப்படமான வாரிசு திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

இந்தப் படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு வெற்றி கரமாக முடிந்த நிலையில் மூன்றாவது கட்டப்பட பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன இந்த படத்தை முடித்துவிட்டு தளபதி விஜய் அடுத்ததாக லோகேஷ் உடன் மீண்டும் ஒருமுறை கைகோர்க்க இருக்கிறார் என்ற செய்தி வெளியாகி உள்ளது.

இப்படி இருக்கின்ற நிலையில் விஜயை வைத்து திருப்பாச்சி, சிவகாசி போன்ற ஹிட் படங்களை கொடுத்து அசத்தியவர் இயக்குனர் பேரரசு இவர் மீண்டும் விஜயை வைத்து படம் பண்ண ரெடியாக இருக்கிறாராம் சமீபத்தை பேட்டிகளில் கூட அவர் சொல்லுவது விஜய் இடம் ஒரு கதையை சொல்லி உள்ளேன் அது குறித்து பேச்சு வார்த்தைகள் போய்க்கொண்டிருக்கிறது.

வெகு விரைவில் இணைவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக கூறினார். சமீபத்தில் ரசிகர்கள் கூட இவரிடம் விஜயை வைத்து எப்போது படம் பண்ணுவீர்கள் என கேட்டுள்ளனர் அதற்கு அவர் பேச்சு வார்த்தைகள்  போய்க்கொண்டிருக்கிறது சீக்கிரம் சொல்வாங்க என கூறினார் இதை அறிந்த ரசிகர்கள் விஜய் லெவல் தற்போது வேற உச்சத்தில் இருக்கிறது.

அவர் பேரரசுடன் இணைவதற்கான வாய்ப்புகள் இல்லை அப்படியே இணைந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் சூழ்நிலைகளில் இல்லை ரசிகர்கள் காரணம் இப்பொழுது ட்ரெண்டே மாறிப் போய் உள்ளது பேரரசு இந்த ட்ரெண்டுக்கு ஏத்த மாதிரி படம் இயக்குவாரா என்பதும் ரசிகர்களுக்கு கேள்விக்குறியாக இருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.