தமிழ் சினிமாவுக்கு டாட்டா காட்ட பார்க்கும் “கீர்த்தி சுரேஷ்”.? காரணம் தெரிஞ்ச ஷாக்காவிங்க..

keerthy suresh
keerthy suresh

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவுலகில் ஆரம்பத்திலிருந்து இப்பொழுது வரையிலும் உச்ச நட்சத்திரங்கள் படங்களில் மட்டுமே நடித்து வருவதால் இவரது மார்க்கெட் குறைபாடு இல்லாமல் இருக்கிறது. அந்த காரணத்தினால் மற்ற மொழிகளிலும் நல்ல வரவேற்பு இருக்கிறது சினிமா உலகில் நல்ல இடத்தை பிடிக்க முடியும் டாப் நடிகர்கள் படங்களையும் தாண்டி திறமையை சரியாக சரியாக காட்ட வேண்டும் என்பதில் கவனமாக இருந்தார்.

அந்த வகையில் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை கதையை அடிப்படையாக வைத்து உருவான மகாநடி படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதன் காரணமாக தேசிய விருதை கைப்பற்றினார். இப்படி ஹீரோயின்னாக நடித்து இருந்தாலும் மறுபக்கம் கெஸ்ட் ரோல், குணத்திர கதாபாத்திரத்திலும் நடித்தும் தலை காட்டி வருவதால் நடிகை கீர்த்தி சுரேஷை கமிட் செய்ய தற்போது இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் போட்டி போட்டுக் கொண்டு வலம் வருகின்றனர்.

என்னதான் தேசிய விருது பெற்ற நாயகியாக இருந்தாலும் இவர் சம்பளம் பெரிய அளவில் தமிழ் சினிமாவிலும் உயரவில்லை. தமிழ்சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக இருப்பவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் 4 கோடியில் இருந்து அதிகபட்சமாக 5 கோடி வரை சம்பளம் வாங்குகிறார் அதற்கு கீழே இருப்பவர்கள் 3 கோடி இரண்டு கோடி லிஸ்டில் தான் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அவரும் நன்கு உணர்ந்து கொண்டு தற்போது தமிழ் சினிமாவில் இப்போ பெரிதளவு படங்களில் நடிக்காமல் தெலுங்கு பக்கத்திலேயே அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார். அங்கு சம்பளமும் கீர்த்தி சுரேஷுக்கு உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தெலுங்கு  நிறைய பட வாய்ப்புகள் இப்போ குவிகின்றன. அந்த வகையில் தெலுங்கில் மகேஷ்பாபுவுடன் ஒரு படம் நடிக்கிறார் மற்றும் ஒரு சில பட வாய்ப்புகளை தெலுங்கில் கைப்பற்றி உள்ளார்.

சினிமா உலகில் தன் திறமையை காட்டினாலும் பெரிய அளவு சம்பளம் எங்கு கொடுப்பார்களோ அங்குதான் நடிப்பார்கள். அதற்கு கீர்த்தி சுரேஷ் மட்டும் என்ன விதிவிலக்கா அவரும் தற்போது தமிழை விட தெலுங்கில் அதிகம் நடிக்கிறார். சம்பளம் தான் காரணம்.