தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராகவும் முன்னணி நடிகராகவும் வளர்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் தனுஷ் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் தமிழ்மொழி திரைப்படங்கள் மட்டும் இன்றி ஹிந்தி தெலுங்கு ஹாலிவுட் என பல்வேறு மொழிகளிலும் திரைப்படங்கள் நடித்து வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் இவருடைய நடிப்பில் தி கிரேமேன் என்ற ஹாலிவுட் திரைப்படம் வெளியாக உள்ளது. பொதுவாக பல்வேறு நடிகர்களை காட்டிலும் நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் அறிமுகமான பொழுது பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.
ஆனால் தான் அவமானப்பட்ட ஒவ்வொரு விஷயங்களையும் ஒவ்வொரு படியாக எடுத்து வைத்து தற்பொழுது தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகராகவும் முன்னணி நடிகராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார் அந்த வகையில் இவருடைய தோற்றம் மற்றும் உடல் மெலிவு போன்றவற்றை பற்றி ரசிகர்கள் விமர்சிப்பது வழக்கம்.
அந்த வகையில் இது குறித்து நடிகர் தனுஷ் அவர்கள் நேர்காணல் ஒன்றில் தான் நடித்த காதல் கொண்டேன் திரைப்படத்தின் சூட்டிங் போது தனக்கு கிடைத்த அனுபவங்கள் பற்றி பகிர்ந்து கொண்டார் அப்பொழுது சோடாபுட்டி கண்ணாடி ஒரு கிழிந்த சட்டை பேண்ட் அணிந்து கொண்டு நான் ஒரு ஓரமாக உட்கார்ந்து இருந்தேன்.
அப்பொழுது கூட்டத்தில் இருந்த ஒருவர் இந்த படத்தில் யார் ஹீரோ என்று கேட்டார் உடனே மற்றொருவர் என்னை கைகாட்டினார்கள் இவ்வாறு என்னை பார்த்தவுடன் பலரும் கலாய்த்து சிரித்தது மட்டுமில்லாமல் மிகவும் மோசமாக கிண்டலடிக்க ஆரம்பித்தார் இதனால் நான் மிகவும் வருத்தப்பட்டு அமர்ந்திருந்தேன் என்று கூறியுள்ளார்.
ஆனால் அதே சமயம் பள்ளி மாணவி ஒருவர் அருகே வந்து எனக்கு கையெழுத்து போடுங்கள் என்று கூறினார் மேலும் நான் உங்களுடைய துள்ளுவதோ இளமை திரைப்படத்தை பார்த்துள்ளேன் அவை எனக்கு மிகவும் ரொம்ப பிடிக்கும் அது மட்டும் இல்லாமல் உங்களுடைய நடிப்பும் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது என்று கூறியுள்ளார்.
அந்த வகையில் நான் கண்ட முதல் பெண் ரசிகை என்றால் அது அவர்தான் அந்த பெண்ணை நான் ஒருபோதும் மறக்கவே மாட்டேன் என உணர்ச்சிபூர்வமாக நடிகர் தனுஷ் அவர்கள் வெளியிட்ட பதிவு சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.