ஒரு படம் வெற்றியடைய ஹீரோ ஹீரோயின் களையும் தாண்டி குணச்சித்திர கதாபாத்திரங்கள் மற்றும் காமெடி கதாபாத்திரங்கள் மிகப்பெரிய பங்காற்றுகின்றன அதை மக்களுக்கு வெளிச்சம் காட்டி வருகிறது மீடியா.
ஹீரோ ஹீரோயின்களுக்கு ஈடு இணையாக காமெடிகளும் மிகப்பெரிய ஒரு பாலமாக படத்தில் பார்க்கப்படுகின்றனர் அந்த வகையில் 90 காலகட்டங்களில் இருந்து தற்போது வரையிலும் மக்களை மகிழ்வித்து கொண்டு வருபவர் தான் வைகைப்புயல் வடிவேலு. இவர் ஒரு காலகட்டத்தில் அனைத்து படங்களிலுமே நடித்து இருப்பார் அந்த அளவிற்கு சினிமாவில் தனது அசாதாரணமான காமெடியை கொடுத்திருந்தார்.
அதனால் மக்கள் மற்றும் ரசிகர்கள் இவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினர். இப்படி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த வடிவேலு இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் 24 ஆம் புலிகேசி என்ற பெயரில் எடுக்கப்பட்டு வந்தது அந்த படத்தை இயக்குனர் ஷங்கர் தயாரித்தார் அப்போது அவருக்கும் வடிவேலுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக தயாரிப்பாளர் சங்கம் வடிவேலு தமிழ் சினிமாவில் நடிக்கக்கூடாது என நிபந்தனை போட்டது.
பல வருடங்கள் கழித்து தற்போது அந்த பிரச்சனை ஒரு வழியாக முடிந்து தொடர்ந்து தற்போது வடிவேலு தமிழ் சினிமாவில் நடிக்கலாம் என கூறப்பட்டது. உடனே லைக்கா நிறுவனத்துடன் இணைந்து தற்போது 5 திரைப்படங்களில் நடிக்க இருக்கிறார் அதில் முதலாவதாக இயக்குனர் சுராஜ் அவருடன் கைகோர்த்து புதிய படத்தில் நடிக்கிறார் அதற்கு முன்பாக பத்திரிக்கையாளர்கள் மத்தியில் பேட்டி கொடுத்தார்.
அதில் திமுக ஆட்சி மற்றும் விவேக் பற்றியே பேசி உள்ளார் வடிவேலு. அவர் கூறியது : திமுக ஆட்சி எனக்கு மட்டுமில்லாமல் மக்களுக்கும் பிடித்த ஆட்சியாக உள்ளது. மேலும் மக்களை சந்தோஷப்படுத்தி வருகிறது என கூறினார் அதைத் தொடர்ந்து அவருடன் சக காமெடியனாக நடித்து வலம் வந்த விவேக் மரணம் குறித்தும் அவர் பேசி உள்ளார்.
என்னுடைய ஒரு அருமையான நண்பன் விவேக் அவன் இறந்தது திரை உலகிற்கும், மக்களுக்கும் மிகப்பெரிய இழப்பு அவருடைய இழப்பை என்னால் ஏற்கவே முடியவில்லை. அவன் இறந்து மிகப்பெரிய வேதனை அளிக்கிறது. அவன் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் அவன் இடத்தையும் சேர்த்து நிரப்ப வேண்டிய பொறுப்பை கடவுள் எனக்கு கொடுத்து உள்ளார் என பேசி முடித்தார்.