சினிமா உலகில் ஒரு சிலரின் காம்போ எப்பொழுதுமே ஹிட் அடிக்கும் அந்த பகுதியில் நடிகர் தனுஷ் செல்வராகவனுடன் கைகோர்த்த நடித்த படங்கள் அனைத்துமே வெற்றி படங்கள் தான் இவர்கள் இதுவரை காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன மற்றும் துள்ளும்போது இளமை ஆகிய படங்களில் இணைந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு தனுஷ் செல்வராகவனுடன் கைகோர்த்து நடித்த படம் தான் நானே வருவேன் இந்த படத்தை கலைப்புலி தாணு அவர்கள் தயாரித்திருந்தார் படம் ஒரு வழியாக நேற்றைய கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது படம் தொடர்ந்து நல்ல விமர்சனத்தை பெற்று வருகின்றன இந்த படத்தில் தனுஷ் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும் இந்த படத்தை இயக்கிய செல்வராகவன் இந்த படத்திலும் நடித்திருக்கிறார் மேலும் இந்துஜா ரவிச்சந்திரன், யோகி பாபு, பிரபு மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருக்கின்றனர். முதல் நாளே நல்ல விமர்சனத்தை பெற்றதால் அடுத்தடுத்த நாட்களிலும் இந்த படத்தை பார்ப்போரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் நானே வருவேன் திரைப்படம் முதல் நாளில் எவ்வளவு வசூல் அள்ளியது என்பது குறித்து தற்போது தகவல் கிடைத்துள்ளது. அதன்படி பார்க்கையில் தனுஷின் நானே வருவேன் திரைப்படம் முதல் நாளில் மட்டுமே தமிழகத்தில் சுமார் 7 லிருந்து 6.5 கோடி வரை வசூலித்து இருக்கும் என சொல்லப்படுகிறது.
உலகளவில் நானே வருவேன் திரைப்படம் நல்ல வசூல் வேட்டை நடத்தி இருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன. வருகின்ற நாட்களில் நானே வருவேன் திரைப்படத்தின் வசூல் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது காரணம் இந்த படத்தின் விமர்சனம் நன்றாக இருப்பதால் வசூலும் அதிகரிக்கும் எந்த பிரச்சனையும் இருக்காது என கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்க்கலாம் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.