தமிழ் சினிமாவில் சமீபத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் இருக்கும் திரைப்படம் என்றால் அது விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் கோப்ரா திரைப்படம் தான் இந்த திரைப்படத்தை அஜய் ஞானமூர்த்தி அவர்கள் இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்த திரைப்படத்தின் எதிர்பார்த்து ரசிகர்களின் மத்தியில் மிகுந்துள்ளது.
இதற்க்கு முக்கிய காரணம் என்னவென்றால் பொதுவாக சியான் விக்ரம் அவர்கள் தான் நடிக்கும் திரைப்படத்திற்காக தன்னையே வறுத்து எடுத்துக் கொள்வது வழக்கம்தான் அந்த வகையில் விக்ரம் அவர்கள் சேது, பிதாமகன், அன்னியன், ஐ , பல்வேறு திரைப்படங்களில் பல கெட்டப்புகளில் நடித்து மாபெரும் வரவேற்பு பெற்றுள்ளார்.
இந்நிலையில் நடிகர் விக்ரம் அவர்கள் இந்த கோப்ரா திரைப்படத்தில் சுமார் 20க்கும் மேற்பட்ட கெட்டப்புகளில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகிறார்கள் இந்நிலையில் இந்த திரைப்படத்தின் ஆடியோ லான்ச் மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.
ஆனால் இந்த ஆடியோ லான்ச்சில் நடிகர் விக்ரமால் கலந்து கொள்ள முடியவில்லை அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் அந்த வகையில் இந்த ஆடியோ லான்ச்சுக்கு விக்ரமின் மகன் துருவ் விக்ரம் அவர்கள் கலந்து கொண்டார்.
அது மட்டும் இல்லாமல் இந்த மேடையில் அவருடைய மனதில் தனது தந்தையை பற்றி பல்வேறு விஷயங்களை பகிர்ந்து உள்ளார் அப்பொழுது அவர் கூறியது என்னவென்றால் நான் உங்களுக்காக பெருமளவு கடமைப்பட்டுள்ளேன் அப்பா. என்னுடைய ஒவ்வொரு வெற்றிக்கும் நீங்கள் தான் காரணம்.
அது மட்டும் இல்லாமல் ஒவ்வொரு படியாக என்னை கைப்பிடித்து ஏற்றி விட்டவரும் நீங்கள் தான் ஆகையால் எனக்கு நீங்கள் எப்படி எல்லாம் உதவிணீர்களோ அதே போல நானும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பேன் என துருவ் விக்ரம் அவர்கள் மேடையில் கூறியுள்ளார்.