தமிழ் சினிமாவில் தனது சிறு வயதிலிருந்து நடித்து வரும் நடிகர் சிம்பு தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். மேலும் இவர் திரை வாழ்க்கையில் பல வெற்றி படங்களை கொடுத்தாலும் அதற்கு நிகராக தோல்வி படங்களை கொடுத்திருந்தாலும் அவரை ஆதரிக்க நடிகர் சிம்புவிற்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.
மேலும் நடிகர் சிம்பு சினிமாவில் இடைப்பட்ட காலத்தில் பல தோல்வி படங்களை கொடுத்து தன்னுடைய மார்க்கெட்டை இழந்து இருந்த நிலை மாநாடு திரைப்படத்தின் மூலம் மீண்டும் ஒரு கம்பேக் கொடுத்தார். மாநாடு திரைப்படம் வெளியான போது உணர்ச்சிவசப்பட்டு பேசிய கூல் சுரேஷ் தொடர்ந்து சிம்புவுக்கு ஆதரவாக பேசி வருகிறார்.
கூல் சுரேஷ் தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர் மற்றும் குணச்சித்திர நடிகர் ஆவார். மேலும் இவர் சிம்புவுடன் சேர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து சிம்புவுக்காக பல விமர்சனங்களில் சிக்கியுள்ளார் கூல் சுரேஷ்.
அதனைத் தொடர்ந்து வெந்து தணிந்தது காடு படத்திற்காக youtube சேனல் மூலம் பிரபலமானார் நடிகர் கூல் சுரேஷ். இதைப் பார்த்த நடிகர் சிம்பு அடுத்த படத்தில் நடிகர் கூல் சுரேஷ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க திட்டம் திட்டி உள்ளார்.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க சிம்புவுக்காக கூல் சுரேஷ்க்கு எப்படி உதவினாரோ அதைவிட டபுள் மடங்காக பேசுகிறேன் என்று விஜயலட்சுமி தற்போது பேட்டி அளித்துள்ளார். பிரண்ட்ஸ் திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை விஜயலட்சுமி இவரின் அக்காவின் மகள் தற்போது சிம்புவின் வீட்டின் அருகாமையில் இருக்கும் ஜெயப்ரதாவின் வீட்டில் இருக்கிறார்.
என்னுடைய அக்காவின் உடல்நிலை சரியில்லாததால் என்னுடைய அக்கா மகளை கவனிக்க முடியாமல் போனது. இதனால் சிம்பு அவர்கள் தன்னுடைய அக்கா மகளுக்கு ஏதேனும் உதவி செய்தால் கூல் சுரேஷ் விட பத்து மடங்கு சிம்பு அவர்களுக்கு குரல் கொடுக்கிறேன் என்று கூறியுள்ளார் விஜயலட்சுமி.