கதாபாத்திரம் நல்லா இருந்தா தான் நடிப்பேன்.. யார் பேச்சையும் கேட்க மாட்டேன்னு சொன்ன தனுஷ்.! விஜய் படத்தையே நிராகரித்த சம்பவம்..

dhanush-and-vijay
dhanush-and-vijay

திரையுலகில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தும் நடிகர்கள் சிறந்த இயக்குனருடன் கைகோர்க்கும் போது அந்த படம் மிகப்பெரிய வெற்றி படமாக மாறும் அதன் மூலம் அவருக்கான அங்கீகாரம் பெரிய அளவில் கிடைத்து பின் தனது எண்ணங்களை மாற்றி அமைத்துக்கொண்டு ஹீரோக்கள் ஓடுவது வழக்கம் அந்த வகையில் தமிழ் சினிமாவில் முதலில் காதல் மன்னனாக வலம் வந்த விஜய்.

நடிகரும், இயக்குனருமான வெங்கடேஷுடன் ஒரு படம் பண்ணி தனது போக்கை மாற்றிக் கொண்டுள்ளார் விஜய், வெங்கடேஷ் இயக்கத்தில் உருவான பகவதி திரைப்படத்தில் அடித்து அசத்தினார் இந்த படம். முதல் ஆக்சன் திரைப்படமாக விஜய்க்கு அமைந்தது இந்த படத்தில் விஜயுடன் இணைந்து ரீமாசென், ஜெய், வடிவேலு மற்றும் பல டாப் நடிகர், நடிகைகள் நடித்து அசத்தியிருப்பார்கள்.

இந்த படத்தில் ஒரு சில கதாபாத்திரங்களுக்காக இயக்குனர் முதலில் வெவ்வேறு நடிகர்,நடிகைகளை தேர்வு செய்து வைத்திருந்தார் அந்த வகையில் ஜெய் கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்க வைக்க தனுஷை தான் தேர்வு செய்து உள்ளார். வெங்கடேஷ், கஸ்தூரிராஜா அதாவது தனுஷின் அப்பாவாக ரொம்பவும் நெருக்கமானவர்.

அந்த காரணத்தினால் விஜய்க்கு தம்பி கதாபாத்திரத்தில் தனுசை முதலில் நடிக்க வைக்க முயற்சி செய்து உள்ளார் அதற்கு ஏற்றார்போல கஸ்தூரிராஜாவும் தனது மகன் தனுஷை வெங்கடேஷ் ஆபீசுக்கு அனுப்பி வைத்துள்ளார் அங்கு போன பிறகுதான் தெரிகிறது விஜய்க்கு தம்பியாக ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என சொல்லி உள்ளார்.

சின்ன கதாபாத்திரம் என யோசித்து பின் நான் தம்பியாக எல்லாம் நடிக்க முடியாது என கூறிவிட்டு அங்கிருந்து வந்து உள்ளார். பின் ஜெய்யை விஜய்க்கு தம்பியாக நடிக்க வைத்து வெற்றி படமாக மாறியது என்பதை நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.