தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவர் அஜித் குமார், இவர் தற்பொழுது எச் வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார், இந்த திரைப்படத்தை போனிகபூர் தயாரித்து வருகிறார், தல அஜித்திற்கு சினிமா நட்சத்திரங்களும் ரசிகர்கள் ஆவார்கள்.
இந்த நிலையில் சினிமா நட்சத்திரங்கள் அஜித்தை பற்றி பல்வேறு பேட்டிகளில் ஏதாவது பேசுவார்கள், அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவரான நடிகர் சூர்யா ‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ நிகழ்ச்சியில் அஜித் பற்றிய சுவாரசியமான தகவலை கூறியுள்ளார்.
அதில் சூர்யா அவர்கள் கூறியதாவது தல அஜித் அவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும் நான் முதன் முதலில் நடித்த திரைப்படம் ‘நேருக்கு நேர்’ இந்த திரைப்படத்தில் அஜித் அவர்கள் தான் முதன்முதலில் நடித்துக்கொண்டிருந்தார் ஆனால் சில காரணங்களால் இந்த திரைப்படத்தில் இருந்து விலகிக் கொண்டார் அதன் பின்புதான் நான் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினேன்.
அந்த கதாபாத்திரத்தில் நடித்ததால் தான் இப்பொழுது நான் இந்த திரையுலகில் இருக்கிறேன் என்றும் கூடக் கூறலாம் என சூரிய அவர்கள் நேர்காணலில் கூறினார்.