தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் சமீபகாலமாக சிறப்புக்குரிய படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அத்தகைய படங்கள் திரையரங்கில் வெளிவந்து மிகப்பெரிய வசூல் வேட்டையும் நடத்தி வருகிறது.தளபதி விஜய் அவர்களை வைத்து படம் பண்ண பல இயக்குனர்கள் போட்டி போட்டுக் கொண்டு வருகின்றனர். அதே போல விஜய் அவர்களுடன் இணைந்து நடிக்க நடிகைகளும் பிரபலங்களும் போட்டி போட்டுக் கொண்டு வருகின்றனர்
ஆனால் அவருடன் இணைந்து நடித்த முன்னணி நடிகரான நெப்போலியன் அவர்கள் விஜய் பற்றி சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். அந்தப் பேட்டியில் விஜய் உடனான பிரச்சினை குறித்தும் பேசியிருந்தார்.விஜயுடன் இணைந்து போக்கிரி படத்தில் நடித்த போது இருவருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டது உண்மை அதிலிருந்து விஜயை பற்றி பேசுவதும் இல்லை அவரது படங்களை பார்ப்பதும் இல்லை என நெப்போலியன் ஒரே போடாக போட்டுடைத்தார்.
தற்பொழுது நெப்போலியனை தொடர்ந்து பல இயக்குனர்களும் தளபதி விஜய் உடன் ஏற்பட்ட மனஸ்தாபத்தை பற்றி தெரியவந்துள்ளது.தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஹரி. இவர் சூர்யாவை வைத்து இயக்கி வெற்றிகண்ட படம் வேல். இத்திரைப்படத்தின் கதையை முதலில் விஜய் அவர்களிடம்தான் கூறியுள்ளார். முழுக்கதையையும் கேட்டுவிட்டு விஜய் இந்த படத்தை நிராகரித்துள்ளார்.
தனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுப்பார் என நம்பி சிங்கம் படத்தின் கதையை கூறியுள்ளார் இந்த படத்தின் கதையையும் முழுமையாகக் கேட்ட விஜய் வேண்டுமென நிராகரித்து உள்ளார் என கூறப்பட்டது இதனால் நொந்துபோன ஹரி ஒரு முறையல்ல இரண்டு முறை விஜய்யிடம் கதை சொல்லி அசிங்கப்பட்டு விட்டேன் இனி அவரிடம் கதை சொல்ல மாட்டேன் என தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறி வருத்தப்பட்ட தாக செய்திகள் வெளியாகின்றன.
அதேபோல இயக்குனர் லிங்குசாமியும் பேட்டி ஒன்றில் சண்டக்கோழி படத்தின் கதையை முதலில் விஜய் அவர்களிடம் கூறியதாகவும். இந்த படத்தின் பாதி கதையை மட்டுமே அவர் கேட்டார் மீதி கதையை கேட்க அவர் தயாராக இல்லை என கூறி வருத்தமடைந்தார்.