தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின் ஒரு குறிப்பிட்ட வயதை எட்டிய பிறகு தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு தோழியாகவும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை சுஜிதா. இவர் தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என உட்பட்ட பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
இப்படி ஓடி கொண்டு இருந்த இவருக்கு காலங்கள் போகப்போக சுத்தமாக வெள்ளித்திரையில் வாய்ப்புகள் கிடைக்காததால் சின்னத்திரை பக்கம் தனது திசையை திருப்பிக் கொண்டார். இப்பொழுது பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருகிறார்.
பாண்டியன் ஸ்டோர் தெலுங்கிலும் எடுக்கப்பட்டது அதிலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். சொல்லப்போனால் இப்பொழுது சுஜிதா என்பதைவிட “தனம்” என்று சொன்னால் தான் மக்களுக்கு தெரிகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை சுஜிதா வாலி திரைப்படத்தில் நடந்த ஒரு சுவாரசியமான தகவலை பகிர்ந்துள்ளார்.
நான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது எஸ். ஜே. சூர்யா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான வாலி திரைபடத்தில் அஜித்துக்கு தங்கையாக நடித்து கொண்டிருந்தேன். படப்பிடிப்பு எல்லாம் நடந்து முடிந்து ரெடியான பிறகு படத்தின் பிரிவியூ ஷோ பார்க்க எஸ் ஜே சூர்யா படத்தில் நடித்த அனைவரையும் கூப்பிட்டு இருந்தார். அதில் ஒருவராக நான்னும் அப்பொழுது போயிருந்தேன்.
படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த உடன் அஜித் சார் என்கிட்ட வந்து நீ பத்தாவது படிக்கிறாய் படிக்கின்ற வேலைய பாரு என என்னுக்கிட்ட சொன்னாரு இப்ப அவருக்கு அந்த ஞாபகம் இருக்கா இல்லையான்னு எனக்குத் தெரியல ஆனா நான் அதை மறக்கல. அஜித் படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் வந்து எதார்த்தமாக பேசுவார் என கூறினார் சுஜிதா.