14 வயசுலேயே எல்லாத்தையும் பார்த்துட்டேன்.? “DD” யின் பேச்சைக் கேட்டு அதிர்ச்சியான ரசிகர்கள்

Divya dharshini
Divya dharshini

Divya Dharshini : விஜய் டிவி தொலைக்காட்சியில் திறமையான தொகுப்பாளர்கள் இருந்தாலும் நடிகர், நடிகைகளை பேட்டி எடுப்பது,  படத்தின் ப்ரோமோஷன்  போன்ற நிகழ்ச்சிகளை எல்லாம் டிடி தான் தொகுத்து வழங்குவார்.  அதற்காகவே அவரை பல லட்சம் சம்பளம் கொடுத்து 20 ஆண்டுகளுக்கு மேலாக விஜய் டிவி தொலைக்காட்சி தக்கவைத்து உள்ளது.

இப்படிப்பட்ட டிடி என்கின்ற திவ்யதர்ஷினி வெள்ளி திரைகளும் பல திரைப்படங்களில் தென்பட்டு உள்ளார்.  முதலில் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார் அதன் பிறகு தமிழில் விசில், சரோஜா, பவர் பாண்டி, நல தமயந்தி போன்ற படங்களில் தென்பட்டு வந்த இவருக்கு 2023 நல்ல ஆண்டாக அமைந்துள்ளது.

கைவசம் துருவ நட்சத்திரம், ஜோஷா இம்மை போல் காக்க போன்ற படங்களில் நடித்துள்ளார். இப்படி சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் கொடி கட்டி பறந்து வரும் டிடி என்கின்ற திவ்யதர்ஷினி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். ரசிகர்களுடன் உரையாடுவது, புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வந்து கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் தொகுப்பாளர் டிடி சமீபத்திய பேட்டி ஒன்றில் திருமண வாழ்க்கை குறித்து பேசி உள்ளார் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் குறித்த என்னுடைய புரிதல் வேறாக இருந்தது. இப்பொழுது அது மாறிவிட்டது திருமணம் செய்து கொள்வது அவரவர் விருப்பம் திருமணம் செய்து கொண்டால்  தான் வாழ்க்கை முழுமை அடையும் என்றெல்லாம் கிடையாது திருமணம் செய்து ஆக வேண்டும்..

என்று எந்த கட்டாயமும் கிடையாது திருமணம் வாழ்க்கையில் ஒரு பகுதி தான் திருமணம் செய்யாமல் இருப்பதால் என் வாழ்க்கை குறித்து நீங்கள் யாரும் சர்டிபிகேட் கொடுக்க வேண்டாம் அது எனக்கு தேவையில்லை எனக்காக சர்டிபிகேட்டை நானே கொடுத்துக் கொள்வேன் என்னை பற்றி எனக்கு தான் நன்றாக தெரியும்..

14, 15 வயதிலேயே நான் பப்புக்கு சென்றேன் பார்ட்டிக்கு செல்வதாக கூறியதால் என் அம்மா அனுமதிக்கவில்லை ஆனால் என் அப்பா போக சொன்னார் நான் குடிக்க மாட்டேன் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது இன்று வரை என்னை சுற்றி 100 பேர் குடித்தாலும் நான் குடிக்க மாட்டேன் என்று டிடி அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.