நடிகர் தனுஷ் தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து ஓடிக் கொண்டிருக்கிறார் ஏன் இப்பொழுது கூட மித்ரன் ஜவகர் உடன் மீண்டும் ஒருமுறை கைகோர்த்து தனுஷ் நடித்த திரைப்படம் தான் திருச்சிற்றம்பலம். இந்த படம் அண்மையில் திரையரங்கில் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சூப்பராக ஓடிக்கொண்டிருக்கிறது.
அது போக வசூலும் அடித்து நொறுக்கிறது இதுவரை மட்டுமே 60 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளதாக கூறப்படுகிறது இந்த திரைப்படத்தை தொடர்ந்து தனுஷ் கையில் நானே வருவேன், வாத்தி ஆகிய திரைப்படங்கள் இருக்கின்றன இப்படி இருக்கின்ற நிலையில் தனுஷ் குறித்து பிரபல நடிகை பேசியுள்ளார். தனுஷ் உடன் வாத்தி படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளவர் சம்யுக்தா.
இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனுஷ் குறித்தும் வாத்தி படம் குறித்தும் பேசி உள்ளார். அதில் அவர் சொன்னது, தனுஷ் படம் என்று சொன்னவுடனேயே நான் படத்தில் நடிக்க ஓகே சொல்லிவிட்டேன் தனுஷ் பான் இந்திய நடிகர் எல்லாம் இல்லைங்க பான் வேல்டு ஸ்டார் என அந்த பேட்டியில் பேசி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து இழுத்தார்.
மேலும் பேசிய அவர் வாத்தி படத்தில் தனுஷூடன் நடித்து வருகிறேன் இந்த படத்தில் எனக்கு நடிக்க ரொம்ப பெரிய பெரிய வசனங்கள், டயலாக், டான்ஸ், ரொமான்ஸ் என அனைத்தும் இருந்தது இதனால் தனுஷ் முன்னாடி எந்த தப்பும் செய்து விடக்கூடாது என பயந்து கொண்டே இருந்தேன் ஆனால் தனுஷோ மிக சாதாரணமாக இருந்தார்.
அவருக்கு தெரிந்த சினிமா விஷயங்கள் பற்றிய நுணுக்கங்களையும் எனக்கு சொல்லிக் கொடுத்தார் வாத்தி படப்பிடிப்பில் என்னுடைய கதாபாத்திரத்தை மிக ஈஸியாக கொண்டு வந்தார். படப்பிடிப்பில் தனுஷ் சாதாரணமாக இருப்பார் ஆனால் நடிப்பு என்று வந்துவிட்டால் பின்னி பெடல் எடுப்பார் என அவர் கூறினார்.