விஜயின் “நண்பன்” படத்தை முதலில் பண்ண வேண்டியது நான் தான் – பேட்டியில் உண்மையை உடைத்த முன்னணி நடிகர்.!

vijay
vijay

90 கால கட்டங்களில் இருந்து இப்பொழுது வரையிலும் நடிகராகவும் இயக்குனராகவும் பணியாற்றி மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் பார்த்திபன். இவர் கையில் இரவின் நிழல், பொன்னியின் செல்வன் என அடுத்தடுத்த திரைப்படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.

அதில் முதலாவதாக இரவில் நிழல் திரைப்படம் வெளிவரும் என தெரிய வருகிறது. இவர் அண்மை காலமாக படங்களை இயக்கியும் நடித்தும் வருகிறார் அந்த வகையில் ஒத்த செருப்பு படம் சூப்பர் டூப்பர் வெற்றி பெற்றது அந்த படத்தை தொடர்ந்து தற்பொழுது இரவின் நிழல் என்ற திரைப்படத்தையும் இயக்கி, நடித்துள்ளார்

இந்த படத்திற்கான போஸ்ட் ப்ரோமோஷன் வேலைகளில் மிக தீவிரமாக இறங்கி உள்ளார். அப்பொழுது படம் குறித்தும் நடிகர்கள் குறித்தும் பேசி உள்ளார் பார்த்திபன். அதில் ஒன்றாக விஜய் குறித்து அவர் பேசி செய்தி இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. அழகிய தமிழ் மகன் படத்தில் நடிகர் விஜய் கவிஞராக நடித்திருப்பார்

அந்த படத்தில் ஒரு குழந்தைக்கு அவர் கவிதை சொல்லிக் கொடுக்க அந்த கவிதைக்கு பரிசு கிடைக்கும் அந்த காட்சிகள் இடம் பெற்று இருக்கும் அந்த படத்திற்கான கவிதையை எழுதிக் கொடுத்ததே பார்த்திபன் தான். மேலும் 3 இடியட்ஸ் படத்தை தமிழில் பண்ண போறேன் அந்த படத்தை நீங்க இயக்கி கொடுங்க என நடிகர் விஜய் முதலில் என்னிடம் தான் அணுகினார்

அந்த சமயத்தில் என்னால் அந்த படத்தை இயக்க முடியாமல் போனது. பிறகு ஷங்கர் நண்பன் என்ற பெயரில்  அந்த படத்தை கலர்ஃபுல்லாக இயக்கினார். நான் நண்பன் படத்தை இந்த அளவிற்கு எடுத்திருப்பேனா என்றால் அது கேள்விக்குறி தான் என்றார்.