80 மற்றும் 90 களில் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்தவர் நடிகை மீனா இவர் தனது சிறு வயதில் இருந்தே சினிமாவில் நடிக்க தொடங்கிய இவர் பல நிகழ்ச்சிகளில் நடுவராக பணியாற்றியுள்ளார். இந்த நிலையில் நடிகை மீனா ஒரு பேட்டியில் அஜித்தின் வாலி படத்தில் நான் தான் நடிக்க இருந்தது எனவும் அதேபோல் விஜய்யின் பிரண்ட்ஸ் திரைப்படத்திலும் நான் நடிக்க இருந்தது என்று கூறியுள்ளார்.
பொதுவாக சினிமாவை பொறுத்தவரை நாங்கள் பல படத்திற்கு ஹார்டுவேர்க் செய்திருக்கிறோம் அதுமட்டுமல்லாமல் நாங்கள் ஒரு சில படங்களில் கஷ்டப்பட்டு நடனம் ஆடியது உண்டு ஆனால் முத்து படத்தில் தில்லானா தில்லானா என்ற பாடலுக்கு கஸ்டமே படாமல் நடனமாடியிருந்தோம் அந்தப் பாடல் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது இதற்கு முன்பெல்லாம் பல திரைப்படங்களில் நாங்கள் கஷ்டப்பட்டு ஆடி இருந்தோம் ஆனால் அந்த பாடல் எதுவும் ஹிட் ஆகவில்லை சும்மா ஜாலியாக ஆடியோ பாடல் சூப்பர் ஹிட் ஆனதால் எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.
அதனைத் தொடர்ந்து வேறொரு திரைப்படத்தில் நடிக்கும் போது நானும் இன்னொரு நடிகையையும் நடனம் ஆடிக் கொண்டு இருந்தோம் அப்போது ஒரே சாட்டில் அந்தப் பாடலுக்கு நடனம் ஆட வேண்டும் என்றதால் நானும் அந்த நடிகையும் அந்த பாடலுக்கு கஷ்டப்பட்டு நடனமாடியிருந்தோம் அந்த பாடலுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
அதனை தொடர்ந்து அஜித் நடித்துள்ள வாலி திரைப்படத்தில் முதலில் நான் தான் நடிக்க இருந்தேன் ஆனால் ஒரு சில கால் சீட் பிரச்சனையால் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது இதனால் நான் ரொம்பவும் வருத்தமாக இருந்தேன் என்றும் கூறியுள்ளார். அதன் பின்னர் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பிரண்ட்ஸ் திரைப்படத்திலும் முதலில் நான் தான் நடிக்க இருந்தேன் ஏனென்றால் இந்த படத்தின் மலையாள வெர்ஷனில் நான் பணிபுரிந்தேன் அதேபோல் தமிழில் விஜய் உடன் நடிப்பதாக இருந்தது ஆனால் கால் சீட் பிரச்சனையினால் இந்த படத்திலும் நடிக்க வாய்ப்பு அமையவில்லை என்று மீனா தெரிவித்து இருந்தார்.