குரல் சரியில்லை என்ற ஒரே காரணத்திற்காக என்னை பலமுறை நிக்கினார்கள் – மனம் திறந்த அர்ஜுன் தாஸ்.

arjun-das
arjun-das

தமிழ் சினிமாவில் தற்போது ஹீரோ வில்லனாக நடித்து வருபவர் அர்ஜுன் தாஸ். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி திரைப்படத்தில் வில்லனாக நடித்து அசத்தியிருப்பார். அதைத் தொடர்ந்து இவருக்கு விஜயின் மாஸ்டர்  திரைப்படத்திலும் வில்லன் ரோலே கிடைத்தது.

அதிலும் பின்னி பெடல் எடுத்ததால் தற்போது இவருக்கு பட வாய்ப்புகள் பெரிதும்  வில்லன் ரோல் வந்தாலும் ஒரு சில இயக்குனர்கள் இவருக்கு ஹீரோ கதாபாத்திரமும் கொடுகின்றனர் இதனால் தமிழ் சினிமாவில் ஹீரோ, வில்லனாகவும் மாறிமாறி நடித்து கொண்டு வருகிறார்.

அந்தவகையில் இவர் ஹீரோவாக நடித்த அந்தகாரம் படத்தைத் தொடர்ந்து தற்போது வசந்தபாலன் இயக்கும் ஒரு புதிய படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் அர்ஜுனை தொடர்பு கொண்டு உங்களுடைய குரலுக்காக நீங்கள் எப்போதாவது சினிமாவில் நிராகரிக்கப்பட்டது உண்டா.. என கேள்வி எழுப்பினர் அதற்கு பதில் அளித்த அர்ஜுன் தாஸ்.

ஒரு முறை அல்ல பல முறை இதுபோல் எனக்கு நடந்து உள்ளது. படங்களுக்காக டப்பிங் பேசும் போது பல முறை இது போல் நடந்து உள்ளது. படங்களுக்காக தேர்வு செல்லும் போது எனது குரலை விமர்சிப்பார்கள்

அதுபோன்றுதான் ஒருமுறை ஒரு இயக்குனர் என்னனை சந்தித்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேசினார் அப்போது என் மனதில் நினைத்துக் கொண்டேன் எப்படியும் இந்த இயக்குனர் தனக்கு சான்ஸ் தருவார் என்று ஆனால் சிறிது நேரம் கழித்து வந்து உங்களுக்கு நெகட்டிவ் குரல் தான் என கூறிவிட்டு  வேற ஒரு படத்தில் சந்திப்போம் என சொல்லி அங்கிருந்து புறப்பட்டார்.

அப்பொழுது நான் மனம் உடைந்து போனேன். கைதி படத்தில் நான் வில்லனாக நடித்ததைப் பார்த்த இயக்குனர் எனக்கு போன் செய்து உங்களுக்கு பிளஸ் அந்த குரல் தான் எனக்கூறினார்.