நடிகை அபிராமி மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் நடிகையாக வானவில் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்டரி கொடுத்தார். முதல் படத்திலேயே தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதால் அடுத்தடுத்த வாய்ப்புகள் அவருக்கு குவிந்தது அந்த வகையில் மிடில் கிளாஸ் மாதவன், தோஸ்த், சமுத்திரம், சார்லி சாப்ளின் என வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து தனது திறமையை காட்டி அசத்தினார்.
ஒரு சமயத்தில் விருமாண்டி திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது அதுவும் முன்னணி நடிகரான கமலுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது அதை தேர்ந்தெடுத்து நடித்தார். அபிராமி விருமாண்டி திரைப்படத்தில் நடிக்கும் போது அவருக்கு 20 வயது தான் என்பது குறிப்பிடத்தக்கது இந்த படத்தில் அவர் செண்டிமெண்டிலும் ரொமான்டிக் சீனிலும் செம்மையாக நடித்து அசத்தி இருப்பார்.
இந்தப் படத்தில் கமலுடன் கைகோர்த்து அபிராமி, பசுபதி, நெப்போலியன் மற்றும் பலர் நடித்து அசத்தினர். இந்த படத்தில் அபிராமி அன்னலட்சுமி கதாபாத்திரத்தில் கமலுக்கு ஜோடியாக மிரட்டி இருந்தார் இது குறித்து அவர் பேசி உள்ளது. விருமாண்டி படத்தில் நடிக்கும் பொழுது எனக்கு வயது 20 தான் தொடங்கியது.
இந்த படத்தில் நான் தூக்கு போட்டு சாகும் சீன் நடித்த பிறகுதான் எனக்கு பிறந்த நாளை வந்தது எப்பொழுதுமே படத்தில் நடிப்பதை விட டப்பிங் செய்யும் போது தான் நான் அந்த படத்தை முழுமையாக ஃபீல் பண்ணுவேன். ஆனால் அந்தப் படத்தின் டப்பிங் கூட இந்த அளவுக்கு வெற்றியடைந்ததை நான் எதிர்பார்க்கவில்லை.
படம் ரிலீஸ் ஆன பிறகு மக்களோடு மக்களாக நான் பார்க்கும் பொழுது எனக்கு பூரிப்பாக இருந்தது இந்த மாதிரியான ஒரு படமா என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன். விருமாண்டி படத்தின் கதையை நான் அப்பொழுதுதான் முழுமையாக உணர்ந்தேன் ஒரு ரசிகையாக விருமாண்டி படத்தை நான் மிகவும் பார்த்து ரசித்தேன் என கூறினார்.