பாகிஸ்தான் அணியில் அதிவேக பந்து வீச்சாளராக திகழ்ந்து வருபவர் வஹாப் ரியாஸ். இதுவரை பல்வேறு போட்டிகளில் விளையாடி தனது திறமையை வெளிக்காட்டி உள்ளவர் மேலும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அவ்வப்போது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் அணிக்காக இவர் 27 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார் ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் போட்டிகளில் விளையாடியுள்ளார். 36 வயதாகும் பாகிஸ்தான் வீரர் ரியாஸ் இதுவரை சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 230 விக்கெட்டுகளை சாய்த்து தனது திறமையை காட்டி உள்ளார்.
பாகிஸ்தான் அணியையும் தாண்டி பல்வேறு லீக் போட்டிகளில் விளையாடி வருகிறார். கிரிக்கெட் உலகில் அதிவேக பந்து வீச்சாளர்களுக்கு எப்பொழுதும் சிறந்த இடம் உண்டு அந்த வகையில் ரியாஸ் பல வருடங்களாக பாகிஸ்தான் அணிக்கு விளையாண்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி இருக்கின்ற நிலையில் வஹாப் ரியாஸ் பேட்டி ஒன்றில் அவர் பேசியது ரோகித் ஷர்மா, பாபநாசம் ஆகிய சிறந்த பேட்ஸ்மேன்களில் என்று குறிப்பிடலாம் தான் பந்துவீச பயப்படும் பேட்ஸ்மேன்கள் குறித்து அவர் பகிர்ந்துள்ளார் அதில் அவர் கூறியது பல்வேறு சிறந்த வீரர்களுக்கு பந்துவீசி இருக்கிறேன் அந்த வகையில் ரோகித் சர்மா பாதரசம் போன்ற வீரர்கள் சிறந்த வீரர்கள் எதிரிகளின் பந்துவீச்சை கணித்து சிறப்பாக விளையாட கூடியவர்கள்.
ஆனால் என்னைப் பொறுத்தவரை பந்துவீச பயந்த வீரர் என்றால் அது ஏபி டிவிலியர்ஸ் தான் எனக் கூறினார் ஏனென்றால் நான் எவ்வித பந்துகளை வீச போகிறேன் என்பதை அவர் முன்கூட்டியே கணித்து விடுவார் பவுலரின் மனதை அறியும் திறமை அவரிடம் உள்ளது இதன் காரணமாக நான் நினைப்பது எல்லாம் அவருக்கு எதிராக பந்துவீசி இருக்கிறேனோ அப்போதெல்லாம் என்னை எதிர்த்து அவர் சிறப்பாக விளையாடி இருக்கிறார் என கூறினார்.