அஜித்திடம் என் முகத்தை காட்டிய நம்பிக்கையில் இருந்தேன்.. கடைசிவரை உதவில்லை – வருந்திய காமெடி நடிகர்

Ajith

Ajith : அஜித் ஒரு படத்தை நடித்து முடித்து விட்டால் சிறு இடைவெளி எடுத்துக் கொள்வார் அப்படி துணிவு படத்தை தொடர்ந்து  பைக் ரேஸில் ஈடுபட்ட அஜித் மீண்டும் நடிக்க வந்துள்ளார். மகிழ் திருமேனி இயக்க, லைகா தயாரிப்பில் உருவாகும் விடாமுயற்சி படத்தில் நடிக்க உள்ளார்.

படத்திற்கான வேலைகள் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கின்றன வெகு விரைவிலேயே ஷூட்டிங் துபாய் மற்றும் அபுதாபி போன்ற நாடுகளில் படமாக்கப்பட இருக்கிறதா கூறப்படுகிறது அஜித்தை தவிர இந்த படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்பது இதுவரை அதிகாரப்பூர்வமாக சொல்லப்படவில்லை.

இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் விடாமுயற்சி படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது. இந்த நிலையில் பிரபல காமெடி நடிகர் ஒருவர் அஜித்தை சென்று பார்த்தேன் ஆனால் அவர் உதவவில்லை என ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார் அந்த நடிகர் வேறு யாரும் அல்ல பவா லட்சுமணன் தான்..

இரண்டு முறை அஜித்தை அவரது வீட்டிலேயே சென்று பார்க்க முயற்சித்த போதும் அவரை வீட்டுக்குள்ளேயே விடவில்லையாம், கேமரா முன்பு என் முஞ்சை காட்டினேன் என்றும், எந்த உதவியும் அஜித் செய்யவில்லை என்றும் அஜித் மீது குற்றம் சாட்டியுள்ளார் பவா லக்ஷ்மணன்.  யூடியூபில் அந்த ஒரு பேட்டியில் அஜித் ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருவது என்வென்றால்..

bava lakshmanan
bava lakshmanan

முதலில் எந்த ஒரு நபரிடமும் உதவி கேட்டு அழைவது நாகரிகம் அற்ற செயலாகும் அஜித் எதற்கு உங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் நடிகர் என்றால் உதவி செய்ய வேண்டும் என கட்டாயம் உண்டா.? நீங்கள் சம்பாதிக்கும் காசு எல்லாம் என்ன பண்ணுகிறீர்கள்  என கேள்வி எழுப்பியும் வருகின்றனர்.