தமிழ் சினிமாவில் தற்போது திறமை இருந்தால் யார் வேண்டுமானாலும் படம் எடுக்கலாம் என்பது போல் பல இளம் இயக்குனர்கள் சினிமா உலகில் கால் தடம் பதித்து சிறப்பாக பயணித்து வருகின்றனர். இருந்தாலும் இந்த இளம் இயக்குனர்களின் படங்கள் பெரும்பாலும் மக்கள் மத்தியில் நல்ல வசூலை தான் குவிக்கின்றனர்.
இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் ஆரம்பத்திலிருந்து பல நாவல்கள் மற்றும் உண்மை சம்பவங்கள் போன்றவற்றை மையமாக வைத்து தேசிய விருதை பெறும் அளவிற்கு சிறப்பான படங்களையும் சில இயக்குனர்கள் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் பிரம்மாண்டத்திற்கு பெயர் போன இயக்குனர் ஷங்கர் இயக்கும் படங்கள் அனைத்துமே ஹிட் தான்.
இவரது படங்களில் நடிக்க பல நடிகர் நடிகைகளும் ஆசைப்பட்டு வருகின்றனர். இவர் இயக்கத்தில் வெளிவந்த ஒவ்வொரு திரைப்படங்களும் பெரிய அளவில் ரீச் அடைந்து நல்ல வசூலையும் பெற்றது. அந்த வகையில் ஷங்கர் ரஜினியுடன் இணைந்து சிவாஜி, எந்திரன், 2.0 போன்ற மூன்று படங்களை இயக்கியுள்ளார். இந்த மூன்று படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி இருக்கின்ற நிலையில் அண்மையில் ஒரு பேட்டி ஒன்றில் இயக்குனர் ஷங்கர் ரஜினி குறித்து பேசியுள்ளார் அந்த செய்தி தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த பேட்டியில் இயக்குனர் ஷங்கர் கூறியது : நான் ரஜினி சாரை வைத்து படம் இயக்குவதற்கு முன்பு ஒருநாள் அவரை ஒரு விழாவில் பார்த்தேன் பார்த்ததும் நான் அவரிடம் போய் பேசலாமா வேண்டாமா என யோசித்து ஒதுங்கி நின்றேன்.
உடனே அவர் என்னைப் பார்த்து விட்டு நேராக என்னிடம் வந்து ஹாய் சங்கர், எப்படி இருக்கீங்க, என்ன இந்த பக்கம் என ஜாலியாக கேட்டார். அப்போது எனக்கு ஒரு மாதிரி அசிங்கமாய் போய்விட்டது ஒருவரை பார்த்தால் ஹாய் எப்படி இருக்கிறீர்கள் என கேட்டு ஆரம்பித்து விட வேண்டும் அதை விட்டுவிட்டு யார் பேசலாம் நீயா நானா என யோசித்துக் கொண்டே இருக்கக்கூடாது என அப்போதிலிருந்து என்னை மாற்றிக்கொண்டேன். என அப்போது நடந்ததை வெளிப்படையாக அந்த பேட்டியில் கூறியுள்ளார் இயக்குனர் ஷங்கர்.