படுக்கையறை காட்சிகளில் நடிக்க பயந்தேன்.. தைரியம் கொடுத்து அனுப்பி வச்சது இவங்க தான் – நடிகை இவானா சொன்ன பதிலால் அதிர்ச்சியான ரசிகர்கள்

ivana

பிறமொழி நடிகைகள் தான் தமிழ் சினிமாவில் அதிக பட வாய்ப்புகளை அள்ளி அசத்துகின்றனர் அந்த வகையில் மலையாள நடிகை இவனா தமிழில் நடிகை ஜோதிகா, ஜி. வி. பிரகாஷ் நடித்த “நாச்சியார்” படத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் அதன்பிறகு பிரதீப் ரங்கநாதன் இயக்கிய நடித்த “லவ் டுடே”..

திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து பேரையும், புகழையும் பெற்றார். இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு தமிழில் இவர் எல்ஜிஎம், கள்வன் போன்ற திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இப்படி ஓடிக் கொண்டிருக்கும் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்களும் உருவாகியுள்ளனர்.

அதனால் மற்ற நடிகைகள் போல அவ்வபொழுது தனது சோசியல் மீடியா பக்கத்தில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை  வெளியிட்டு வருகிறார். இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை இவானா பேட்டி ஒன்றில் லவ் டுடே திரைப்படம் குறித்த கேள்விகளுக்கு வெளிப்படையாக பதில் அளித்துள்ளார் அதில் அவர் சொன்னது.. லவ் டுடே திரைப்படத்தில் நடிக்க முதலில் தயங்கினேன்..

ஏனென்றால் இந்த படத்தில் படுக்கையறை காட்சிகள் இருந்தது. நடித்தால் என் வீட்டில் இருப்பவர்கள் என்ன சொல்லுவாங்களோ என்ற பயம் இருந்தது பின்னர் அந்த காட்சி படத்திற்கு தேவை என்பதை தைரியமாக எடுத்து கூறினேன் அப்பொழுது என் அம்மா, அப்பா இருவரும் கதைக்கு தேவைப்பட்டால் தாராளமாக நடிக்கலாம் என்று அனுமதி அளித்தனர். அதன் பின்னர் எந்த பயமும் இல்லாமல் நன்றாக நடிக்க முடிந்தது எனக் கூறினார்.

ivana
ivana

விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள்  எதுக்கு தான் சப்போர்ட் பண்ணனும்னு இல்லையா.. இவ்ளோ ஃப்ரீடமாக எல்லாம் கொடுக்கக் கூடாது எனக் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர். ஆனால் இதையெல்லாம் ஒரு பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளாமல் நடிகை இவானா தனது சினிமா வேலையை பார்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது