தமிழ் சினிமா உலகில் தற்பொழுது வளர்ந்த வரும் நடிகைகளில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை கயல் ஆனந்தி இவர் 2012ஆம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த “ஈ ராஜுலு” என்ற திரைப்படத்தின் மூலம் தன்னுடைய திரை வாழ்க்கையை தொடங்கினார். இதனை தொடர்ந்து 2014ஆம் ஆண்டு பொறியாளன் என்ற திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.
பிறகு கயல் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். இந்த படத்தின் மூலம் பட்டிதட்டியெங்கும் பிரபலமடைந்த இவருக்கு சண்டிவீரன், விசாரணை, பரியேறும் பெருமாள் உள்ளிட்ட பல படங்களில் தொடர்ந்து நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் இவருக்கு கடந்த ஜனவரி மாதம் இணை இயக்குனரான சாக்ரடீஸ் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.
நான்கு வருடங்களாக காதலித்த இவர்கள் பிறகு தங்களுடைய பெற்றோர்கள் சமூகத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நான்கு திரைப்படங்களில் நடித்து வந்தார் இப்படிப்பட்ட நிலையில் கயல் ஆனந்தி கடந்த சில மாதங்களுக்கு முன்பு கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து திறந்தார். இந்நிலையில் இவர்களுக்கு சமீபத்தில் ஆண் குழந்தையும் பிறந்தது.
இந்நிலையில் கர்ப்பமாக இருந்த பொழுதும் கூட இவர் நடித்திருக்கிறார். அந்த வகையில் இவர் யூகி என்ற திரைப்படத்தில் நடித்த முடித்துள்ளார் இந்த திரைப்படம் வருகின்ற 18ஆம் தேதி அன்று வெளியாக இருக்கிறது இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்ற நிலையில் இந்த விழாவில் கலந்து கொண்ட கயல் ஆனந்தி பேட்டி அளித்திருந்தார்.
அதில் நான் கயல் திரைப்பட பண்ணி எட்டு வருடங்கள் ஆகிவிட்டது ஆனால் இப்பொழுதும் அதே அன்பை தமிழ் சினிமா எனக்கு கொடுத்திருப்பதை நினைத்து எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அதற்கு தமிழ் திரைதுறைக்கும், தமிழ் ரசிகர்களுக்கும் மிக்க நன்றி இது திரைப்படம் தனிப்பட்ட முறையில் எனக்கு ஒரு ஸ்பெஷலான திரைப்படம் ஏனென்றால் இந்த படம் பண்ணும் பொழுது நான் உண்மையில் கர்ப்பமாக இருந்தேன் இந்த படத்தை சில ஆண்டுகள் கழித்து பார்க்கும் பொழுது எனக்கு ஒரு நல்ல நினைவாக இருக்கும் என கூறியுள்ளார்.