தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் கார்த்திகேயா. இவர் பல்வேறு திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் 2018ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான ஆர்எக்ஸ் 100 என்ற திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதன் மூலம் இவர் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தார் மேலும் தெலுங்கில் நானி நடிப்பில் வெளியான கேங் லீடர் என்ற திரைப்படத்தில் வில்லனாக நடித்து அசத்தி இருந்தார்.
அதனை தொடர்ந்து தற்போது தமிழில் அஜித்துடன் இணைந்து வலிமை திரைப் படத்திலும் வில்லனாக நடித்து உள்ளதால் தற்போது இவர் தென்னிந்திய சினிமா முழுவதும் பிரபலம் ஆகியுள்ளார். இப்படி இருக்கின்ற நிலையில் கார்த்திகேயா வலிமை வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார்.
அதன் பிறகு தற்போது இவருக்கு பல்வேறு படங்களில் கமிட்டாகி உள்ளதோடு மட்டுமல்லாமல் பல பேட்டிகள் கொடுத்து வருகிறார் அந்த வகையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் வலிமை படம் குறித்தும், அஜித் பற்றியும் அவர் பேசிய செய்தி பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. எனது உடல் தோற்றத்தைப் பார்த்தே வலிமை திரைப்படத்திற்கு வாய்ப்பு கொடுத்தனர்.
அது போலவேதான் கேங் லீடர் படத்திலும் எனது உடல் தோற்றத்துக்கு ஆகவே வைப்புகள் கொடுத்ததாக அந்த இயக்குனரே சொல்லியிருந்தார் தற்போது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது மேலும் வலிமை படத்தில் அஜீத சார் போன்ற ஒரு சூப்பர் ஸ்டார் உடன் வலிமை படம் முழுவதும் நான் வந்து நடிப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது.
இப்படி இருக்கவே எனக்கு தமிழ் சினிமாவில் பல பட வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கின்றன என கூறினார் மேலும் வலிமை படத்தின் முதல்நாள் ஷூட்டிங்கில் நான் சற்று பதட்டமாக இருந்தேன் அஜித் சார் என்னை தனியாக அழைத்து சென்று சாந்தப்படுத்தினார்.
அவர் சொன்ன வார்த்தைகள் இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கிறது மொத்த குழுவும் என்னை சிறப்பாக கவனித்துக் கொண்டனர் மேலும் அஜித் சார் போன்ற ஒரு சிறந்த மனிதரை என் வாழ்க்கையில் இதுவரை நான் பார்த்ததே இல்லை அந்த அளவுக்கு மிகவும் பணிவான மனிதர் என கூறி வாழ்த்தினார்.