13 வயதிலேயே கமலுடன் சேர்ந்து நடிக்க ஆசைப்பட்டேன் – “விக்ரம்” ஆடியோ பங்ஷனில் பேசிய விஜய் சேதுபதி.!

vikram movie
vikram movie

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் இப்பொழுது உருவாகியுள்ள திரைப்படம் தான் விக்ரம். படம் ஜூன் மூன்றாம் தேதி உலக அளவில் படம் ரிலீஸாக இருப்பதாக கூறப்படுகிறது.  இந்த படத்தில் இதுவரை வெளிவந்த படங்கள் அனைத்தும் சிறப்பாக இருந்த நிலையில் நேற்று விக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் டிரைலரும் ரிலீஸ் செய்யப்பட்டது.

சென்னை நேரு மைதானத்தில் இந்த படத்தின் ஆடியோ பங்ஷன் நடைபெற்றது இதில் உலகநாயகன் கமலஹாசன், விஜய் சேதுபதி, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் சினிமா பிரபலங்களான சிம்பு, அக்ஷரா ஹாசன், காளிதாஸ் ஜெயராம், பா. ரஞ்சித் மற்றும் பலர் கலந்துகொண்டு இந்த நிகழ்ச்சியை அசத்தினர்.

அப்பொழுது ஒவ்வொரு சினிமா பிரபலம் மேடையில் பேசினார் அவர்களில் ஒருவரான பா. ரஞ்சித்தும் பேசினார் அவர் கமலின் அடுத்த படத்தை இயக்கப் போகிறேன் அந்த படம் மதுரையை மையமாக வைத்து உருவாகும் என குறிப்பிட்டார் இவரை தொடர்ந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மேடையில் பேசினார் அதில் அவர் சொன்னது.

கமல் 60 பங்க்ஷன் அப்போ  கமல் சார் முன்னாடியே நான் நடிக்கணும்னு கேட்டேன். அது இப்போ நடந்திருச்சு ஆனா அடுத்த ஆசை வந்துடுச்சு அதாவது கமல் சார் டைரக்ஷன்ல நான் நடிக்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கேன் என கூறினார்.

kamal
kamal

மேலும் பேசிய விஜய் சேதுபதி 13 வயசுல கமலின் நம்மவர் படத்துல நடிக்க ஆடிஷன்னுக்கு போனேன்.  ஆனா என்ன ரிஜெக்ட் பண்ணிட்டாங்க.. கமல் சாருடன் நான் இப்ப சேர்ந்து நடித்தது என்னோட புண்ணியமோ அல்லது என் பாட்டன் செய்த புண்ணியாம்மன்னு தெரியல என கூறினார்.